26 வயதில் கன்னித்தன்மையை இழக்க காரணமே அந்த பாலிவுட் நடிகர் தானா?.. பிரபலம் போட்ட பெரிய குண்டு!
மும்பை: பிரபல பாலிவுட் இயக்குநர் சமீபத்தில் நடிகையுடன் நடத்திய கலந்துரையாடலில் தனது கன்னித்தன்மையை ஒரு பிரபலம் 26 வயதிலேயே சூறையாடி விட்டதாக பேசியது அந்த நடிகையை பயங்கர அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தி திரையுலகையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
நடிகையின் அப்பா தான் இதற்கு காரணமா? என்கிற கேள்வி கிளம்பிய நிலையில், அதில், ஒன்று பொய், ஒன்று மட்டுமே உண்மை என அந்த பாலிவுட் பிரபலம் மறைத்து விட்டார். இந்நிலையில், அவரது கன்னித்தன்மை 26 வயதில் போனது உண்மை என்கிற பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அதற்கு காரணமே பெரிய பாலிவுட் நடிகர் என்கிற குண்டை பிரபலம் ஒருவர் தூக்கிப் போட்டுள்ளார்.

சினிமா துறையில் ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னைகள் ஒவ்வொரு நாளும் திரை மறைவாக நடந்துக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில், இங்கேயே ஒரு தயாரிப்பாளர் ஓபனாக பேசியது என சினிமா உலகில் நடக்கும் படுமோசமான நிகழ்வுகள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது.
26 வயதில் பிரபலத்தை சீரழித்த நடிகர்: பாலிவுட்டின் மிகப்பெரிய இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் அந்த பிரபலத்தை அவரது இளமை காலத்தில் அப்போதே பேரும் புகழுடன் இருந்த பிரபல நடிகர் ஒருவர் ரூமுக்கு வரவழைத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக பகீர் தகவலை அந்த இயக்குநரே கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமாவுக்கு வாய்ப்புத் தேடி வரும் பல இளம் பெண்களையும் இளம் ஆண்களையும் கூட அந்த பிரபலம் எப்படி விட்டு வைத்திருப்பார் என்கிற கேள்வி கிளம்பியிருக்கிறது.
உச்ச நட்சத்திரம்: இயக்குநருடன் அதிகமாக நெருங்கி பழகி இன்றளவும் டாப் ஹீரோவாக இருந்து வரும் அந்த உச்ச நட்சத்திரம் தான் இத்தகைய மோசமான காரியத்தை தனது இளம் வயதில் செய்திருக்கிறார் என்றும் அவரை ரசிகர்கள் தங்களது கடவுளாகவே பார்ப்பது எல்லாம் காலக் கொடுமை என பிரபலம் ஒருவர் சமீபத்தில் பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.
நடிகையின் அப்பா: மேலும், இந்த பிரபலத்துக்கு நடிகையின் அப்பா தரப்பில் இருந்தும் சில தொல்லைகள் மற்றும் கொடுமைகள் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அதனை மறைமுகமாக சொல்லிவிட்டு பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காக பொய் சொன்னேன் என மழுப்பி விட்டார் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதுபோன்ற கேவலமான வேலைகளை செய்பவர்களை பிரபலங்களே வெளிப்படையாக அடையாளம் காட்டாமல் தங்களது சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என பயப்படுவதால் தான் அவர்கள் தொடர்ந்து இதுபோன்று கேடுகெட்ட வேலைகளை பார்த்து வருகிறார்கள் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











