»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

"அரசனை நம்பி புருஷனை இழந்த" கதையாக கடும் துயரத்தில் இருக்கிறார் பூமிகா.

"பத்ரி"யில் அறிமுகமாகிய பூமிகா, "ரோஜாக் கூட்டம்" மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு நிறைய தமிழ்ப் பட வாய்ப்புகள் வந்தன. தெலுங்கில் கிடைத்ததை விட அதிக சம்பளமும், பட வாய்ப்புகளும் கூட கிடைத்தன.

இருந்தாலும் அவற்றை எல்லாம் ஏற்க மறுத்து விட்டு தெலுங்கிலேயே அதிக கவனம் செலுத்தினார் பூமிகா. இதனால் தமிழில் வந்த வாய்ப்புகள்திரும்பிச் சென்று விட்டன.

இந்நிலையில் தற்போது தெலுங்கில் அவருக்கு இறங்குமுகம் ஏற்பட்டுள்ளது. கையில் ஒரு படமும் இல்லாத நிலையில் தவித்து வருகிறார் பூமிகா.

சரி, தமிழ் பக்கம் பார்க்கலாம் என்று இங்கு வந்தால் அவரை சீந்துவதற்கு கூட ஒருத்தரையும் காணோம். ஏற்கனவே வாய்ப்பு தர முன்வந்தவர்களைஇவரே போய் பார்த்தும் யாரும் கண்டுகொள்ளவில்லையாம்.

வெறுத்துப் போய் விட்ட பூமிகா பட வாய்ப்புக்காக கோடம்பாக்கத்தில் அலையோ அலையென்று அலைந்து வருகிறார்.

Please Wait while comments are loading...