»   »  வாய்ப்பை தேடி போக மாட்டேன்! - அடம் பிடிக்கும் பாக்ஸிங் நடிகை

வாய்ப்பை தேடி போக மாட்டேன்! - அடம் பிடிக்கும் பாக்ஸிங் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாக்ஸிங் படம் மூலம் முதல் படத்திலேயே தேசிய விருது வரை புகழ்பெற்றவர் அந்த நடிகை. ஆனால் கையில் ஒரே ஒரு படம் அதுவும் முடிந்து விட்டதால் சும்மா இருக்கிறாராம்.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பாக்ஸிங் படம் மூலம் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார் அந்த பாக்ஸிங் நடிகை. சொந்த கேரக்டர்தான் என்பதால் அபாரமாக நடித்து தேசிய விருது வாங்கினார். படம் கமர்ஷியலாகவும் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் விஜய் சேதுபதி, லாரன்ஸ் ஜோடியாக இரண்டு படங்களில் நடித்தவர் போலீஸாக நடித்திருக்கும் ஒரு படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. ஒரு படத்தில் கவர்ச்சியாகவும் நடித்து தான் எல்லாவற்றுக்கும் தயார் என்று சொல்லாமல் சொன்னார்.

ஆனாலும் நடிகையை தேடி வாய்ப்புகள் வரவில்லை. முக்கியமாக பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. சினிமாவில் தேடிச்சென்று வாய்ப்பு கேட்க வேண்டுமே... அது நடிகைக்கு வரவில்லையாம். வருகிற வாய்ப்புகளை மட்டும் ஏற்றுக்கொள்வோம். இல்லாவிட்டால் பாக்ஸிங்கில் கவனம் செலுத்துவோம் என்ற முடிவில் இருக்கிறாராம்.

சமீபத்தில் நல்ல கான்செப்ட் என்பதால் குறும்படம் ஒன்றிலும் தோன்றினார் நடிகை. திறமையான இவரைக் கண்டுகொள்ளுமா தமிழ் திரையுலகம்?

English summary
That boxer turned actress is adamant in her policy and not requesting any director for chances.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X