»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த கன்னட நடிகை சைத்ரா சென்னைக்கு வந்தார்.

அவரை வரவழைத்தது இயக்குனர் குருதனபால். இவர் எடுத்து வரும் சுயேச்சை எம்.எல்.ஏ என்றபடத்தில் நடிப்பது குறித்து டிஸ்கஸ் செய்ய வரச் சொல்லியிருந்தார்.

ஏற்கனவே தமிழில் வெல்டன் என்ற படத்தில் நடித்துள்ள சைத்ரா, சென்னைக்கு வந்து விஜய்பார்க்- இன் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டுத் தங்கினார்.

அவரைப் பார்க்க மாலை நேரத்து மயக்கத்தில் ஹோட்டலுக்குப் போனார் குருதனபால். சைத்ராவின்அறைக்குள் போன சிறிது நேரத்திலேயே சைத்ராவைத் திட்டியவாரே குருதனபால் வெளியேவந்தார். இவளை விட்டா வேற நடிகையே கிடையாதா என்ன என்று குரல் எழுப்பியபடி காரில்ஏறிப் பறந்தார்.

அடுத்த சிறிது நேரத்தில் சைத்ராவும் ரூமைப் பூட்டிவிட்டு மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பினர்.இவன் எல்லாம் ஒரு ஆள், சே என்று இந்தியில் திட்டியவாறே காரில் ஏறிப் போனார் சைத்ரா.

உள்ளே என்ன பிரச்சனை நடந்ததோ தெரியவில்லை... யாமறியோம்..

மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்த சைத்ரா அப்படியே கன்னட சினிமாவில் காலடி எடுத்துவைத்ததோடு, தெலுங்கு மற்றும் தீவிரமாக சான்ஸ் தேடிக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் தான் இப்படி ஒரு சம்பவம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil