»   »  'அது' நடந்துவிட்டதால் நடிகையின் திருமண திட்டத்தில் மாற்றம்

'அது' நடந்துவிட்டதால் நடிகையின் திருமண திட்டத்தில் மாற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலருக்காக நடிகை மதம் மாறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு காதலரின் மதப்படி மட்டுமே திருமணம் நடக்க உள்ளதாம்.

சென்னையை சேர்ந்த நடிகை தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகியாக உள்ளார். அவரும் டோலிவுட்டின் இளம் வாரிசு நடிகரும் காதலித்து வருகிறார்கள். நடிகரின் வீட்டில் முதலில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Change in this actress' wedding plan

தற்போது அவர்கள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர். இதையடுத்து அடுத்த ஆண்டு திருமணம் நடக்க உள்ளது. நடிகையும், அவரது காதலரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இதனால் அவர்களின் திருமணம் இரு மதங்களின் சம்பிரதாயப்படி நடப்பதாக இருந்தது.

இந்நிலையில் நடிகை தனது காதலருக்காக மதம் மாறிவிட்டாராம். காதலரின் மாநிலத்தில் நடந்த மதமாற்று சடங்குகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின.

தற்போது இருவரும் ஒரே மதம் என்பதால் திருமணத்தை ஒரு முறை மட்டுமே நடத்தப் போகிறார்களாம்.

English summary
Buzz is that the young actress who is set to marry her actor boyfriend will tie the knot according to the groom's religious traditions only.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil