For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  "கிசு கிசு" கார்னர்

  By Staff
  |

  ஸ்னேகாவிடம் ஷாம் அறை வாங்கிய விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து ஷாம் குறித்த இன்னொரு மூடி மறைக்கப்பட்ட விஷயமும் வெளி வந்துள்ளது.

  அந்த துறுதுறு நடிகை ஷாமுடன் முதல் படத்தில் சேர்ந்து நடித்துள்ளார். அப்போது, நடிகை சுதந்திரமாக பழகியதைதப்பாக நினைத்துக் கொண்ட அவர், சிக்னல் கொடுத்துள்ளார், கிடைக்காத போதிலும், மீறி வந்து நெறுங்கினாராம்.

  கடுப்பாகிப் போன நடிகை, ஷாமை தனியே கூப்பிட்டு எச்சரித்தாராம். தனது எதிர்காலமும் நடிகரின் பெயரும்கெட்டுப் போய்விடக் கூடாதே என்பதற்காக வெளியில் சொல்லாமல் மறைத்திருக்கிறார்.

  ஆனால், சினேகா அறைந்துவிட்டதாக வந்த தகவலைக் கேட்டதும் அந்த துறுதுறு மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம்.அதை இப்போதும் சொல்லி பரவசப்பட்டு வருகிறார் அந்த துறுதுறு நடிகை.

  அதே நேரத்தில்,

  இந்த விவகாரத்தில் ஷாமின் பெயர் கெட்டது குறித்து தவம் நடிகர் ரொம்ப உற்சாகமாக இருக்கிறாராம்.

  எனக்கு ஏட்டிக்குப் போட்டியாக செய்து வந்த ஷாமுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று அந்தநடிகர் தனது, உள்நாக்கு தெரியும் வகையில் விழுந்து, விழுந்து சிரித்தாராம் சிரிப்புககு பேர் போன அந்த நடிகர்.

  5 தந்திரம்

  பஞ்சதந்திரம் ரிலீசுக்குத் தயாராகிவிட்டது. படம் குறித்த லேட்டஸ்ட்கள் இதோ...

  கமல்ஹாசன் இதில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். அவருடன் கூடப் பாடுவது சிம்ரன். பிறகு ஒரு வெள்ளைக்காரரும் பாடியிருக்கிறார். பாட்டு அட்டகாசமாக வந்திருப்பதாக தேவாவை பாராட்டினாராம் கமல்.

  படத் தயாரிப்பாளர் தேனப்பனும், டைரக்டர் ரவிக்குமாரும் டியர் பிரண்ட்ஸ். எனவேதான் தேனப்பனுக்காக ரவிக்குமார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். தேனப்பன், கமலுக்கும் கூட டியர் பிரண்ட் என்பது தெரியும்தானே?. செட்டிநாட்டுப் பெயர் போலத் தெரிந்தாலும் கூட தேனப்பன் சுத்தமான மலையாளி.

  கமல் இதில் காமெடியில் மட்டுமல்லாது சண்டைக் காட்சிகள் மற்றும் நடனத்திலும் கூட பயறுத்தியிருக்கிறாராம். ஜப்பான் நடிகை ஒருவருடன் கமல் இதில் ஆடிப்பாடுகிறார்.

  காதலை திட்டி ஒரு படம்

  காதலை மையமாக வைத்து வித்தியாசமான ஒரு காதல் கதை படமாக உள்ளது. இதில் காதலை வில்லனாக காட்டியிருக்கிறார்களாம் (அட).

  முற்றிலும் புதுமுகங்களே நடிக்கவுள்ள முகில் என்ற இந்தப் படத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்தப் படத்தை இயக்கப் போவது ராஜாராம்-அனந்தா என்ற இரட்டையர்கள்.

  ஹீரோவாக நடிக்கவிருப்பவர் ஸ்ரீகேஷ். படம் முழுவதும் பெரும்பாலும் புதுமுகங்களே நடிக்கவுள்ளார்கள்.

  காதலிப்பதற்கு முன்பு நன்றாக இருந்த ஒருவன், காதலித்த பிறகு தவறான பாதையில் போய் சீரழிகிறான் என்பதேகதையாம்.

  பரணி இசையமைக்கிறார். பாடல்களை வாலியும், பா.விஜய்யும் எழுதுகிறார்கள்.

  விஜய் ரசிகை தேவயானி

  முன்னாடியெல்லாம் படங்கள் வரும். அதில் எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்கள் போல ஹீரோக்கள் நடித்திருப்பார்கள். அப்புறம் வந்தபடங்களில் ரஜினி, கமல் ரசிகர்கள் போல ஹீரோக்கள் சித்தரிக்கப்படுவார்கள்.

  இப்போது ரஜினிக்கும், கமலுக்கும் கடுக்காய் கொடுத்து விட்டார்கள் இப்போதைய டைரக்டர்கள்.

  தேவயானி நடித்து வரும் கற்பூர நாயகி படத்தில் ஹீரோயினாக வரும் தேவயானி, யாருடைய ரசிகையாக நடிக்கிறார் தெரியுமா? கமலோ,ரஜினியோ இல்லை சாரே, விஜய்யின் பரம ரசிகையாக வருகிறாராம்.

  விஜய் பட போஸ்டரை ஒரு கும்பல் கிழித்துக் கொண்டிருக்குமாம். அதைப் பார்த்து விடும் தேவயானி புலிப் பாய்ச்சலில் அந்த நபரிடம்வருவார். அய்யா, விஜய் என்னோட உசுரு. அவரு படத்தை கிழிக்காதீங்க என்று கெஞ்சுவார்.

  ஆனால் அந்த கும்பல் அதைக் கண்டுகொள்ளாமல் கடமையே கண்ணாக இருக்குமாம். அவ்வளவுதான், என்னோட தலைவர் படத்தையாகிழிக்கிறீர்கள் என்று கோபமடையும் தேவயானி, பாய்ந்து, பாய்ந்து அந்தக் கும்பலைப் புரட்டி எடுப்பாராம்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X