விரட்டியடிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள்.. நடிகை அவ்வளவு தைரியமாக இருக்க காரணமே வேற!

By Staff

மும்பை: இந்த நடிகை இந்தியாவிலேயே நன்கு அறியப்பட்ட நடிகை. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா உலகில் நடித்து வருகிறார். இப்போதும் முன்னணி கதாபாத்திரங்களில் தான் நடிக்கிறார். 50 வயதை நெருங்கி விட்டோம் என்று கல்லூரி மாணவி கதாபாத்திரங்களில் நடிக்காமல், தனது வயதுக்கும் அனுபவத்திற்கும் ஏற்றதைப்போல, தனக்குத் தகுந்த கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இப்படி இருக்கும்போது நடிகை சமீப காலமாக மிகவும் பெரிய பெரிய பட்ஜெட் படங்களில் கமிட் ஆகிவிட்டு அதன் பின்னர் அதில் இருந்து வெளியேறுகிறார். அதற்கு காரணம் நடிகை ஏதோ அவசரத்திலோ, அல்லது கோபத்திலோ எடுத்த முடிவுகள் இல்லையாம். ஆனாலும் நடிகையின் இந்த முடிவுகளுக்கு நடிகைக்கு இருக்கும் தலைக்கணம் தான் காரணம் என்று சொன்னவர்கள் எல்லாம் உள்ளார்கள். ஆனால் நடிகை இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், முன்பை காட்டிலும் செம தைரியமாகவும் துணிச்சலாகவும் திரையுலகில் வலம் வருகிறாராம்.

Cinema Actress Gossip Why Actress Left Movies Reason IS Very Big

ஷாக் தகவல்: அதற்கு காரணம் என்ன என்று விசாரித்தவர்கள் சொல்லும் பேச்சும் திரையுலகில் வேகமாக பரவி வருகிறது. அதாவது நடிகையை அனுகிய தயாரிப்பாளார்கள் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை முக்கியமானது என்று தெரிவித்து, இயக்குநருடன் சேர்ந்து கதை சொல்லி உள்ளார்கள். ஆனால் நாட்கள் ஆக ஆக கதையின் தன்மை மாறி, நடிகையின் கதாபாத்திரத்திற்கு கொஞ்சமும் முக்கியம் இல்லாமல் உப்பு சப்பு இல்லாத கதாபாத்திரமாக மாற்றி உள்ளார்கள். இதனால் செம அப்செட் ஆன நடிகை, தயாரிப்பாளரையும் இயக்குநரையும் அழைத்து காட்டுக் கத்து, கத்தி விட்டுள்ளார். மேலும் படத்தில் நடிக்க முடியாது, நான் வெளியேறுகிறேன்.

தனி மரியாதை: இப்போதே அக்ரிமெண்ட் தயார் செய்து கொடுங்கள் நான் கையெழுத்து போடுகிறேன் என்று சத்தம் போட்டதாக கூறுகிறார்கள். தயாரிப்பாளர் தரப்பில் இருந்தும், இப்படிச் சொல்லும் நடிகையை நாம் நடிக்க வைத்தால், படத்தின் படப்பிடிப்பு, டப்பிங், புரோமோசன் என எல்லாவற்றிலும் பெரிய தலைவலியாக இருக்கும் என்று, நடிகையை படத்தில் இருந்து விலக்கி உள்ளார்கள். இந்த தகவல் திரை வட்டாரத்தில் வெளியான பின்னர் நடிகையைப் பார்த்தாலே பலருக்கும் ஏற்கனவே இருந்த மதிப்பைக் காட்டிலும் கூடுதல் மதிப்பு ஏற்படுகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X