»   »  டிவி ஹீரோவுக்கு ஃபைனான்ஸ் பண்ணுவது மூன்றெழுத்து தொழிலதிபர்?

டிவி ஹீரோவுக்கு ஃபைனான்ஸ் பண்ணுவது மூன்றெழுத்து தொழிலதிபர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டில் இப்போது எல்லோருடைய கண்ணும் அவர் மீதுதான். பத்து படங்களுக்குள் விஜய், அஜித்துக்கு நிகராக வளர்ந்தவர். அதற்குள்ளாகவே சொந்த (என்னதான் மேனேஜருடையது என்று சொன்னாலும் பணம் கொடுத்தவர்கள் அந்த மேனேஜரையா நம்பி கொடுத்தார்கள்? இந்த தம்பியைத் தானே?) தயாரிப்பிலும் இறங்கி விட்டார். அதுவும் மிகப் பெரிய பட்ஜெட்டில்.

சரி, ஒரு கோழி மசாலா தடவிகிட்டு தானே எண்ணெய் சட்டில குதிக்குது... குதிக்கட்டும் வேடிக்கை பார்க்கலாம் ஐ ஜாலி... என்று காத்திருந்த பெரிய ஹீரோக்கள் கண்முன்னேயே மிக பிரம்மாண்டமாக ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சியையும் நடத்தி அசத்திவிட்டார். இதுக்கெல்லாம் எங்கேருந்து வருது பணம் என்றுதான் கோடம்பாக்கத்தின் நண்டுசிண்டுக்கு கூட சந்தேகம்.

Controversial businessman behind TV Hero?

அந்த சோர்ஸ்... கிரானைட் பிசினஸின் பெரும்புள்ளியான மூன்றெழுத்து இனிஷியல் தொழிலதிபராம். தம்பியின் கல்யாணத்தின் போதுகூட வருகை தந்து சிறப்பித்திருக்கிறார். நமக்குதான் இத்தனை நாட்களாக தெரியாமல் போயிருக்கிறது.

இந்த படத்துக்கு மட்டுமல்ல அடுத்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து படத்துக்கு ஐம்பது கோடி வீதம் பேசியிருக்கிறார்களாம். நாற்பது கோடி பட்ஜெட்டுக்கே சரியாக போனதால் மீதமுள்ள பத்து கோடி படத்தின் புரமோஷனுக்கு என்று ஒதுக்கியிருக்கிறார்களாம். இதுதான் அந்த ஆடம்பரத்துக்கு காரணம்.

சரி, என்ன காரணத்துக்காக பெரும்புள்ளி சினிமா பக்கம் வருகிறார்? வேற என்ன... அரசியல் ஆசை தான். அப்ப கட்சி ஆரம்பிச்சா தம்பி பிரசாரத்துக்கு போய்தானே ஆகணும்...?

English summary
Sources says that controversial industrialist is financing to TV Hero's new movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil