வாயை மூடிட்டு சும்மா இரு.. வாரிசு நடிகைக்கு டோஸ் விட்ட அப்பா.. அதுதான் காரணமா?
சென்னை: போகிற இடங்களில் எல்லாம் அதிகமாக வாயடித்து வரும் அந்த வாரிசு நடிகைக்கு அப்பா திடீரென டோஸ் விட்டு இருப்பதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
Recommended Video
பிரபலத்தின் மகள் சமீபத்தில் வாரிசு நடிகையாக அறிமுகமான நிலையில், அவரை சுற்றி ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.
சர்ச்சைகளும் நடிகையை சுற்றி வலம் வரத் தொடங்கி உள்ளதால் அப்பா ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம்.

இதுக்குத்தான் வேண்டாம்னு சொன்னேன்
இப்படியெல்லாம் தேவை இல்லாத பிரச்சனைகள் கிளம்பும் என்பதற்காகத்தான் சினிமாவே வேண்டாம் என்று சொன்னேன். ஆனால், நீ தான் அடம்பிடித்து இப்படி வந்து சிக்கிக் கொண்டாய் என மகளிடம் சமீபத்தில் நடந்த பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டாராம்.

கிரிஞ்சுன்னு சொல்றாங்க
இளம் நடிகை செல்லும் இடங்களில் எல்லாம் வாய் துடுக்காக பேசி வருவதால், அவரை பார்த்தாலே இரிடேட் ஆகுது என்றும் கிரிஞ்ச் மேக்ஸ் என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தது நடிகையை ரொம்பவே பாதித்துள்ளதாம். இதை ஒரு கம்பிளைன்ட்டாக அப்பாவிடம் கொண்டு சென்றதால் தான் அப்படி டோஸ் விட்டுள்ளார் என பரபரப்பாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

வாயை மூடிட்டு சும்மா இரு
குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணாத என்றும், தேவையில்லாமல் பேசக் கூடாது என்றும் அளவாகவும் அமைதியாகவும் பேசினால், யாருமே உன்னை ட்ரோல் செய்ய மாட்டார்கள், மாறாக ரசிகர்கள் அதிகரிப்பார்கள். பிரபல நடிகர்களை பார், அவர்கள் அதிகமாக பேசவே மாட்டார்கள் அதுதான் வெற்றிக்கு வழி என டோஸுக்கு பிறகு அட்வைஸும் கொடுத்துள்ளாராம்.

தொடர்ந்து பிரச்சனை
நெப்போடிசம் சர்ச்சை, பாட்டுப் பாடிய சர்ச்சை, லவ் லெட்டர் சர்ச்சை என தொடர்ந்து வாரிசு நடிகை பல பிரச்சனைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில், செல்லும் இடங்களில் எல்லாம் அளந்து பேசாமல் இஷ்டத்துக்கு பேசி வருவதால், அவரை வைத்து படமெடுக்க உள்ள அடுத்த பட இயக்குநருக்கும் தேவையில்லாத தலைவலிகள் கிளம்பி உள்ளதாம். இதனால், இயக்குநர் நடிகையின் அப்பாவின் காதில் இந்த விஷயத்தை போட்ட நிலையில், தான் அவர் அப்படி வெளுத்து வாங்கி, மகளுக்கு புத்தி சொல்லி உள்ளார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











