»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை தேவயானியும், நீ வருவாய் என படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இயக்குநர் ராஜகுமாரனும்திங்கள்கிழமை வீட்டை விட்டு ஓடிப்போய் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் திங்கள்கிழமை (9.4.2001) திருத்தணியில் காலை 9.30 மணிக்கு நடந்தது. தேவயானியின்காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால் காதலர்கள்நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்ததும் அவர்கள் எங்கே சென்றார்கள்? அவர்கள் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தநண்பர்கள் யார் என்பது குறித்தான விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

விரைவில் தேவயானியும், ராஜகுமாரனும் தங்கள் திருமணம் குறித்து பேட்டி கொடுக்கலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

தேவயானி திருமணம் செய்து கொண்டது குறித்துத் தெரிந்து கொண்டதும் அவரது தாய் நேரடியாகவிஜயகாந்திடம் சென்று என் பெண்ணை மீட்டுத் தாருங்கள் என்று கூறினார்.

ஆனால் விஜயகாந்தே அவர்கள் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டு விட்டார்கள். நாம் எதுவும்செய்ய முடியாது. அவர்களை பிரிப்பதில் சட்டசிக்கல்கள் உள்ளன என்று கூறி தேவயானியின் அம்மாவைசமாதானப்படுத்தினார்.

இதையடுத்து தனது மகளை நேற்று இரவு முதல் காணவில்லை என தேவயானியின் அம்மாவும் அப்பாவும்போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

தேவயானியையும், ராஜகுமாரனையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஜயகாந்தும், தேவயானியின் குடும்பத்தாரும்இறங்கியுள்ளனர்.

இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் ராஜகுமாரன். இவர் இரண்டுஆண்டுகளுக்கு முன்பு தேவயானியை ஹீரோயினாக வைத்து நீ வருவாய் என என்ற படத்தை எடுத்தார்.

அப்போதே நடிகை தேவயானிக்கும், இயக்குநர் ராஜகுமாரனுக்கும் காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் வந்தது.வழக்கம்போல் இருவரும் காதலும் இல்லை, ஒன்றும் இல்லை என்று மறுத்து வந்தார்கள்.

அதே போல், இயக்குநர் ராஜகுமாரனின் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்திலும் நடிகை தேவயானியேகதாநாயகி. படம் முழுக்க முழுக்க தேவயானிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. இதில் ஹீரோவான சரத்குமாரே சைட் ஆக்டர் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil