»   »  முழு விபரம்

முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

ஜெமினி பிலிம்ஸ் நிறுவனம் சமீபத்தில் தெலுங்கில் தயாரித்து வெளியிட்ட ஆர்யா என்ற திரைப்படம் மாபெரும்வெற்றி பெற்றுள்ளது.

அல்லு அர்ஜூன்- அனுராதா ஆகிய புதுமுகங்களை வைத்து இயக்கப்பட்ட இந்த ஆக்ஷன்-காதல் படம் கொட்டியவசூல் மழையில் முழுக்க நனைந்துவிட்ட தயாரிப்பு நிறுவனம் அதை அப்படியே தமிழிலும் எடுக்க முடிவுசெய்துள்ளது.

யுவன் என்ற பெயரில் தனுஷை ஹீரோவாக போட்டுள்ளார்கள். படத்தை இயக்கப் போவது அரவிந்த் கிருஷ்ணா.இவர் தனுசின் அண்ணன் செல்வராகவனிடம் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

படத்தை இயக்குவது என்னவோ அரவிந்த் கிருஷ்ணா தான் என்றாலும் தமிழுக்கு ஏற்றபடி கதையை அட்டகாசமாகமாற்றி, எழுதித் தந்தாராம் செல்வராகவன். ஸ்கிரிப்டைப் பார்த்துவிட்டு பூரித்துப் போன ஜெமினி நிறுவனம்இதற்காக செல்வராகவனுக்கு ஒரு மிட்சுபிஸி லேன்சர் காரை பரிசாகத் தந்திருக்கிறது.

இப்போது தனுஷ் மேட்டருக்கு வருவோம்.

இந்தப் படத்துக்கு தனுஷ் கேட்கும் சம்பளத்தால் ஜெமினி பிலிம்ஸ் தவித்துக் கொண்டிருக்கிறதாம். தொடர்ந்துதோல்விகளையே கொடுத்து வரும் தனுஷ் இந்தப் படத்துக்கு ரூ 3.5 கோடி சம்பளம் கேட்க, அதை ரூ. 2கோடியாகக் குறைத்தது தயாரிப்பாளர் தரப்பு.

சரி என்று ஒப்புக் கொண்டார் தனுஷ். ஆனால், அவரது மார்க்கெட் சொல்லிக் கொள்ளும்படி இல்லாததாலும்,படத்தின் ரிசல்ட் விஷயத்தில் எந்த உத்தரவாதமும் இல்லாததாலும் சம்பளத்தை கொஞ்சம் குறைக்கச்சொன்னார்களாம்.

ஆனால் தேவதையைக் கண்டேன் படம் நல்லா தானே போகுது, இதனால் என் மார்க்கெட்டில் எந்த சரிவும் இல்லைஎன்று கூறிவிட்ட தனுஷ் சம்பளத்தை குறைத்துக் கொள்ள மறுத்துவிட்டாராம்.

இதனால், படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. தொடர்ந்து சம்பள விவகாரம் குறித்து கட்ட பஞ்சாயத்துலெவலுக்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே தனுஷ்-ப்ரியாமணியை வைத்து அது ஒரு கனாக் காலம் படத்தை எடுத்து வரும் பாலு மகேந்திராஅதை ஒரு சிற்பம் மாதிரி அழகாக செதுக்கிக் கொண்டிருக்கிறாராம்.

இதுவரை 35 எம்.எம்மில் மட்டுமே படம் பிடித்து வந்த இந்த கேமரா கவிஞர் முதல் முறையாக சினிமாஸ்கோப்பில்எடுத்துக் கொண்டிருக்கிறார்.

16 முதல் 21 வயது வரையிலான கவலையில்லாத இரு உள்ளங்களின் காதலைத் தான் பாலு அது ஒரு கனாக்காலமாக்கிக் கொண்டிருக்கிறார்.

படத்தில் ப்ரியாமணியை நாட்டுக் கோழி லெவலுக்கு உரித்து எடுத்துவிட்டாராம். தமிழில் எப்படியாவது காலூன்றவேண்டும் என்ற வெறியில் இருக்கும் ப்ரியாவும் சொன்னதைக் கேட்டுக் கொண்டது மட்டுமின்றி தானாகவே முன்வந்தும் ஏக தாராளம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

தனுஷைத் தான் சொல்லவே வேண்டாமே. வேலைக்காக ஏங்கும் இளைஞனாக நடிக்கும் அவர், பிளஸ் டூமாணவியின் காதலில் சிக்கிக் கொள்வதாய் கதை. உள்ளோட்டமாய் காமம் இழையோடும் இந்த ரோலை தனுஷ்எப்படிச் செய்வார் என்று உங்களுக்குத் தான் நல்லா தெரியுமே.

இந்தப் படம் முடியும் தருவாயில் இருப்பதால், சம்பளப் பிரச்சனை தீர்ந்தவுடன் யுவன் படத்தில் தனுஷ் நடிக்கப்போகிறார். அதன் பின்னர் கங்கை அமரன் இயக்கத்தில் பஞ்சு அருணாச்சலம் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கஅட்வான்ஸ் வாங்கியிருக்கிறார் தனுஷ்.

இன்னொரு சேதி தெரியுமா? மருமகன் தனுசுக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் புது பங்களா ஒன்றை திருமண பரிசாக வாங்கிகொடுத்துள்ளார் ரஜினி. ஆனால், தனுஷோ ஆழ்வார்ப்பேட்டையில் ரூ. 6 கோடி பட்ஜெட்டில் ஒரு பங்களா கட்டி வருகிறார். அதில் தான்ஜஸ்வர்யாவுடன் குடியேறப் போகிறாராம்.

இதற்கிடையே சந்திரமுகியைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ள ரஜினி,அதில் வரும் இரண்டாவது கதாநாயகன் கேரக்டரில் தனுஷை நடிக்க வைக்கலாமா என்று யோசித்து வருவதாய் சொல்கிறார்கள்.

வெல்லப் போவது தனுஷா? ரவியா?

இன்னொரு தகவல்.. தமிழகத்தில் மிக ஹாட்டாக ஓடிக் கொண்டிருக்கும் காதல் படத்தில் முதலில் நடிக்க இருந்தது தனுஷ் தான். ஆனால்,கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்ததால் அதில் பரத்தை போட்டார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். இப்போது அந்தப் படம் ஓடும்ஓட்டத்தைப் பார்த்து மிஸ் பண்ணிட்டேனே என்று தனுஷ் புலம்புவதாய் தகவல்.

Read more about: actress, cinema, dhanush, rajini, ramya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil