மொத்த பேரையும் தானே சம்பாதிக்க திட்டமிட்ட இயக்குநர்.. டென்ஷனில் டாப் நடிகர்.. இனிமேல் நோ கூட்டணி?

By Staff

சென்னை: கடந்த 2 படங்களும் பெரிய அளவு பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்காத நிலையில், 3வது படத்தில் எந்தவொரு தலையீடும் இருக்கக் கூடாது என டாப் நடிகருக்கு இயக்குநர் திட்டவட்டமாக கூறி விட்டாராம்.

நடிகரும் இயக்குநர் பேச்சையே இந்த முறை கேட்டுத் தான் பார்ப்போமே அப்படி என்ன தான் பண்ண போகிறார் என அனைத்திற்கும் அமைதியாக தலையை ஆட்டி உள்ளார்.

இந்நிலையில், படம் வெளியாகும் சமயத்தில் ஒட்டுமொத்த பேரையும் தானே சம்பாதித்து விட வேண்டும் என்கிற சுயநல நோக்கத்தில் அந்த இயக்குநர் பேசி வருவது டாப் நடிகரை ரொம்பவே டென்ஷனில் ஆழ்த்தி உள்ளதாம்.

தோல்வி அடைந்தால்

தோல்வி அடைந்தால்

முன்னதாக வெளியான படம் தோல்வி அடையும் என்பதை அறிந்த கொண்ட இயக்குநர் தனது பெயரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என நினைத்து படத்தின் கதை மொத்தமும் நடிகர் சொன்னது தான் என அவரை புகழ்வது போல வஞ்ச புகழ்ச்சி அணியில் சம்பவம் செய்து விட்டார். மேலும், அந்த டாப் நடிகர் இயக்குநரின் பேச்சையே கேட்காமல் செயல்படுவதாகவும், இயக்குநருக்கு ஃப்ரீடம் கொடுக்காதவர் போலவும் பிம்பத்தை கட்டமைத்து விட்டார்.

சுயநலம்

சுயநலம்

தற்போது டாப் நடிகரின் நடிப்பில் உருவாகி உள்ள படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்பதை அறிந்து கொண்ட இயக்குநர் சுயநலமாக எல்லாவற்றுக்கும் நான் மட்டும் தான் காரணம் என்று தம்பட்டம் அடித்து வருவது டாப் நடிகரின் காதுகளுக்கும் எட்டி உள்ளது.

டென்ஷனான டாப் நடிகர்

டென்ஷனான டாப் நடிகர்

படம் நல்லா வந்திருக்கு என்கிற சந்தோஷத்தில் இருந்து வந்த டாப் நடிகருக்கு தற்போது இயக்குநர் இப்படி சுய தம்பட்டம் அடித்து வருவது மட்டுமின்றி செல்லும் இடமெல்லாம் நம்ம பெயரை டேமேஜ் செய்வது வருவது போல பேசி வருவதை அறிந்து ரொம்பவே டென்ஷன் ஆகி விட்டாராம். மேலும், நடிகரின் பேச்சை மீறி சில விஷயங்களிலும் இயக்குநர் கை வைத்திருப்பது நடிகரை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது என்கின்றனர்.

நோ கூட்டணி

நோ கூட்டணி

தோல்வியுடன் அந்த இயக்குநரை துரத்தி விடக் கூடாது என நினைத்து அடுத்தடுத்த வாய்ப்புகளை வழங்கிய நடிகரையே மட்டம் தட்டுவது போல பேசி வரும் இயக்குநர் தான் அந்த டூப் மேட்டரையும் கசிய விட்டுள்ளார் என ஷாக்கிங் தகவல் நடிகருக்கு தெரிய வந்த நிலையில், இனிமேல் எதிர்காலத்தில் கூட கூட்டணியே கிடையாது என்கிற முடிவுக்கு வந்து விட்டாராம்.

இயக்குநர் புலம்பல்

இயக்குநர் புலம்பல்

தொடர்ந்து பெரிய நடிகர் படம் பண்ணுகிறோம் என்பதால் ரொம்ப நெருக்கடி கொடுத்துட்டாங்க, எனக்கான சுதந்திரமே கிடைக்கவில்லை. அடுத்து பெரிய நடிகர் படத்தில் தலையை கொடுத்து மாட்டிக் கொள்வதற்கு முன்பாக காமெடி நடிகரை வைத்து சிறிய பட்ஜெட்டில் ஒரு கலகலப்பான படம் எடுக்க வேண்டும் என இயக்குநரும் ஒரு பக்கம் புலம்பி வருகிறாராம்.

அந்த நம்பிக்கை

அந்த நம்பிக்கை

இயக்குநர் இப்படி அனைத்தையுமே வெளிப்படையாக பேசி வரக் காரணமே இந்த முறை எந்த சறுக்கலும் ஏற்படாது என்கிற நம்பிக்கையால் தானாம். அத்தனைக்கும் முழு முதற் காரணமாக இருந்த நடிகரை மட்டம் தட்டி பேசுவதை தவிர்த்து விட்டு அவருக்கான மாஸை கொடுத்து இருந்தால் இன்னமும் நல்லா இருக்கும் என கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X