பஞ்ச் டயலாக் இல்லாமல் படமா...டாப் ஹீரோ போட்ட கன்டிஷனால் உச்சகட்ட குழப்பத்தில்

By Staff

சென்னை : அந்த முக்கியமான காதல் கனவு படத்தை முடித்த பிறகு தான் எல்லாம் என இருந்த ரெளடி பட டைரக்டர், நினைத்தபடியே படத்தை முடித்து விட்டு, சொந்த வேலைகளை கவனிக்க போய் விட்டார். ஜாலி ட்ரிப்பை முடித்து விட்டு, டாப் ஹீரோ பட வேலையை ஆரம்பித்து மும்முரமாக செய்து வருகிறார்.

ஏற்கனவே இவர் தயார் செய்து வைத்திருந்த ஸ்கிரிப்டில் சில மாற்றங்களை செய்ய சொல்லி டாப் ஹீரோ சொல்லி விட்டதால், அதை மாற்றிக் கொண்டு போய் காண்பித்துள்ளார். அதிக பஞ்ச் வைத்திருப்பதால் ஹீரோவிற்கு பிடிக்கும் என்றும் நினைத்துள்ளார்.

ஆனால் மாறாக, ஸ்கிரிப்டை பார்த்ததும் அந்த டாப் ஹீரோ, ரெளடி பட டைரக்டர் மீது செம கடுப்பாகி விட்டாராம். இதற்கு காரணம் ஸ்கிரிப்டில் அதிகப்படியான பஞ்ச் டயலாக்குகள், அரசியல் வசனங்கள் வைத்தது தானாம்.

பஞ்ச் டயலாக்கே வேண்டாம்

பஞ்ச் டயலாக்கே வேண்டாம்

"பஞ்ச் டயலாக் எல்லாம் வேண்டாம். என் ரசிகர்களை தாண்டி அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கிற மாதிரி கதையை ரெடி பண்ணுங்க.அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவருவதாக கதை இருந்தால் மட்டும் போதும். தேவையில்லாத பிரச்சனைகளை இழுக்க வேண்டாம்" என கன்டிஷனாக சொல்லி விட்டாராம் அந்த ஹீரோ. அரசியல் வசனங்களை வைத்து விட்டு, பிறகு படத்திற்கு எதிர்ப்பு, டயலாக்கிற்கு எதிர்ப்பு, சீனை நீக்கனும் என்கிற விவகாரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டும் என்று தான் முன்னெச்சரிக்கையாக இப்படி கட் அண்ட் ரைட்டாக பேசி, ஒரு கன்டிஷனை போட்டுள்ளார் அந்த ஹீரோ.

இப்போ கதையவே மாற்றனுமே

இப்போ கதையவே மாற்றனுமே

டாப் ஹீரோ போட்ட இந்த கன்டிஷனை கேட்டு கடும் மன வருத்தத்திற்கு ஆளாகி உள்ளாராம் டைரக்டர். காரணம், அவர் தயாரித்த கதைக்கு முக்கியமானதே அந்த அரசியல் பஞ்ச் டயலாக் தானாம். அதையே நீக்க ஹீரோ கன்டிஷன் போட்டு விட்டதால் கிட்டத்தட்ட கதையையே மொத்தமாக மாற்றும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளாராம் டைரக்டர்.

கஷ்டப்பட்டது எல்லாம் வீணா போச்சே

கஷ்டப்பட்டது எல்லாம் வீணா போச்சே

ஏற்கனவே ஹீரோ சொன்ன மாற்றத்தை செய்வதற்காக மிகவும் மெனக்கெட்டு இப்படி ஒரு பஞ்ச் டயலாக்குடனான கதையை ரெடி செய்தாராம் டைரக்டர். படத்தை ஆரம்பிப்பதற்கான வேலையை துவங்கும் சமயத்தில் வந்து இப்படி கதையையே மாற்ற சொல்லி விட்டாரே என மன வேதனையுடன் புலம்பி வருகிறாராம் டைரக்டர்.

புலம்பி தவிக்கும் டைரக்டர்

புலம்பி தவிக்கும் டைரக்டர்

இதில் கொடுமை என்னவென்றால், அந்த டாப் ஹீரோ தற்போது நடித்து வரும் படத்தின் வேலைகள் முடியும் நிலையில் உள்ளதாம். அந்த படத்தை முடித்த கையோடு ரெளடி டைரக்டரின் படத்தின் வேலைகளில் தான் ஹீரோ இறங்க போகிறார். அந்த அவகாசம் இல்லாத நிலையில் புதிய கதையை தயார் செய்து எப்படி கொண்டு வர முடியும். அப்படியே வந்தாலும் எப்படியும் இவர் ஓகே சொல்ல போவதில்லை என தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் புலம்பி வருகிறாராம்.

பேசாம சிறிய படங்களே பண்ணிருக்கலாம்

பேசாம சிறிய படங்களே பண்ணிருக்கலாம்

பெரிய ஹீரோ படம் என்பதால் இதை இயக்கி ஓரளவிற்கு ஹிட்டாக்கி விட்டால் இதை வைத்தே சினிமாவில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி விடலாம் என கணக்கு போட்டு வந்தார் அந்த டைரக்டர். இப்போது ஹீரோ போடும் கன்டிஷன்களை பார்த்து, இதற்கு பேசாமல் சிறிய ஹீரோக்களின் படங்களையே விட்டு போயிருக்கலாம். பெரிய ஹீரோ படம் என ஆசைப்பட்டு வந்து, இப்போ இப்படி ஏடாகூடமாக மாட்டிக் கொண்டோமே என்றும் சொல்லி புலம்பி வருகிறாராம்.

ஹீரோவின் கோபத்திற்கு இவர் தான் காரணமா

ஹீரோவின் கோபத்திற்கு இவர் தான் காரணமா

ஆனால் டைரக்டரின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் அவர் மனைவி தானாம். டைரக்டரின் அந்த கனவு காதல் படம் சொதப்பியதால் லேசான அதிருப்தியில் இருந்த ஹீரோவின் காதிற்கு, டைரக்டரின் மனைவி சம்பளம் தொகையை உயர்த்தி கராராக பேசி வரும் விஷயம் எட்டி உள்ளது. ஏற்கனவே அதிருப்தியில் இருந்த ஹீரோவிற்கு இதனால் தான் டைரக்டர் மீது கோபமாம். அதோ கதையும் தனது விருப்பத்திற்கு ஏற்றபடி இல்லாததால் டைரக்டர் மீது எக்கச்ச கடுப்பாகி விட்டாராம் ஹீரோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X