»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

மணிரத்னத்தின் அறிமுக நடிகர் அவர். இந்தி டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவரைப் பிடித்து வந்து அலைபாய விட்டார்மணிரத்னம். முதல் படம் நன்றாக ஓடியதால் அடுத்தடுத்த படங்களும் அதுபோலவே ஓடி, ரஜினி, கமலுக்கு அடுத்து நாம்தான் என்று அவர்தெரியாத்தனமாக நினைத்து விட்டார்.

அலைபாய்ந்த பிறகு ஒரு படம் கூட அவருக்கு சரியாக ஓடவில்லை. மின்னல் மட்டும் கொஞ்சம் காப்பாற்றியது. கல்யாண மேளம் படமும்பெரிய அளவுக்கு அவருக்குப் பலனளிக்கவில்லை. பரவசத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். பார்த்தாலே டென்சன் என்றஅளவுக்குத்தான் படம் இருந்தது.

இதனால் அந்த ஹீரோவே தட்டுத் தடுமாறித் தான் ஒவ்வொரு படமாக தேடிப் சான்ஸ் பிடித்து நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரைபெரிய போட்டியாக நினைத்துக் கொண்டு இன்னொரு புதுமுகம் டென்ஷனாக கோடம்பாக்கத்தை சுற்றிக் கொண்டிருக்கிறார். பஸ் படத்தில்இவர்தான் ஹீரோ.

அலையை ஓய்துத்துக் காட்டுகிறேன் பார் என்று கருவிக் கொண்டுள்ள இந்த பஸ் நடிகர் இதற்காக அலைநடிகர் ஒப்பந்தமாகியுள்ளபடங்களின் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு, என்னைப் போடுங்களேன், ஒரு பிரச்சினையும் வராமல் நடித்துக் கொடுக்கிறேன்.சம்பளம், நீங்க பார்த்துக் கொடுத்தால் போதும் என்று நெய் வழியப் பேசுகிறாராம்.

இந்த செய்திகள் அலை நடிகரின் காதுகளில் வந்து விழ அவர் ரொம்ப கடுப்பாகி விட்டாராம். என்னை மாதிரி மூஞ்சி இருந்தா மட்டும்போதுமா, நடிக்க வேணாம், பஸ்தான் பஞ்சராகி விட்டதே, இன்னும் என்ன மண்டக்கனம் என்று நண்பர்களிடம் பொரிந்து தள்ளுகிறாராம்.

இந் நிலையில் கன்னம் படம் நன்றாக ஓடிக் கொண்டிருந்தாலும், குட்டி நடிகை மற்றும் ரன் நடிகையின் நடிப்பு பற்றித்தான்பட்டிதொட்டியெங்கும் பேச்சு பலமாக இருக்கிறது. அலைக்கு போதிய பாராட்டு கிடைக்கவில்லை. இதனால் பஸ் நடிகர் ரொம்பஉற்சாகத்தில் இருக்கிறாராம்.

விஜய், அஜீத், விக்ரக்கு இடையே இப்படி போட்டி வந்தால் நியாயம். ஆனா, இவரு நடிச்சு ஓடினதே இரண்டு படம். இன்னொருத்தருக்குஒரே படமும் கூட ஓடலை. இவங்க எதுக்கு மோதிக்கிறாங்க என்று கோடம்பாக்கமே குழம்பிக் கிடக்கிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil