»   »  இதுலயும் எனக்கு சான்ஸ் வேணும்!- அடம் பிடிக்கும் நடிகை

இதுலயும் எனக்கு சான்ஸ் வேணும்!- அடம் பிடிக்கும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆண் கோழி படத்தில் தமிழில் அறிமுகமான நடிகை அவர். அவ்வப்போது தலையைக் காட்டினாலும் நடித்த படங்கள் பெரிதாக போகாததால் தெலுங்கு, மலையாளம் பக்கம் ஒதுங்கினார். பூ நடிகையின் கணவர் இயக்குநர்தான் மீண்டும் நடிகையைக் கூட்டி வந்தார். கூட்டி வந்ததோடு தன்னுடைய படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் தந்து வருகிறார். கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த படத்திலும் நடிகைதான் நாயகி.

மூன்று படங்கள் இப்படி தொடர்ந்து வாய்ப்பு பெற்றவர் நான்காவது படத்திற்கும் அடிபோடுகிறாராம். வேற எந்த இயக்குநரும் வாய்ப்பு தர மாட்றாங்க... நீங்களே அடுத்ததா பண்ற படத்துல சான்ஸ் கொடுங்க.. என்று கேட்கிறாராம். அடுத்த படம் பெரிய கம்பெனிக்காக பண்ணும் பெரிய பட்ஜெட் படம். இயக்குநர் வாய்ப்பு கொடுப்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

English summary
Flop heroine seeking chance in big budget movie directed by Aranmani director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil