»   »  'எனக்கு சின்னம்மாவைத் தெரியும்'... கோலிவுட்டை சுற்றும் ஃப்ராடுகள்!

'எனக்கு சின்னம்மாவைத் தெரியும்'... கோலிவுட்டை சுற்றும் ஃப்ராடுகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அரச நிறுவனத்தை நிர்வகித்துவந்தவர் போலீஸில் சிக்கினாலும் சிக்கினார் கோலிவுட்டின் பிரபலங்கள் அநியாயத்துக்கு பயந்துபோய் இருக்கிறார்கள்.

மேலிட கம்பெனிக்கு அடுத்தடுத்த கால்ஷீட் கொடுத்ததன் பேரில் டிவி ஹீரோ ரிலீவ் ஆகிவிட்டார். மற்றவர்கள் எல்லாம் எப்படியாவது மேலிடத்தைச் சரிகட்டி தங்கள் பெயரை லிஸ்டில் இருந்து நீக்கிவிட பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள பல ஃப்ராடுகள் கோலிவுட்டில் முளைத்திருக்கிறார்கள். 'எனக்கு சின்னம்மாவை தெரியும். சின்ன ஐயாவை தெரியும்' என்று பிரபலங்களிடம் வலை விரிக்கிறார்கள்.

குறிப்பாக சில பினாமி தயாரிப்பாளர்கள், ஏடாகூடமாக சிக்கிக் கொண்டிருக்கிற சினிமா புள்ளிகள்தான் இவர்கள் டார்கெட். அது ஓரளவு வேலை செய்துமிருக்கிறது.

விவரம் தெரியாமல் சிலர் பெருந்தொகைக்கு இவர்கள் வலையில் விழுந்திருக்கிறார்களாம். இந்தக் கதைகள் எல்லாம் விரைவில் வெளியாகும் என்கிறது போலீஸ் தரப்பு.

English summary
A lot of frauds rounding in Kollywood and giving false promises to celebrities as they removing their names in gray producer's list.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil