»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

படம் வரும் முன்பே வாலிபப் பசங்களை பரபரக்க வைத்து விட்ட காயத்ரி ஜெயராம் தனது முதல் படமான மனதைத் திருடி விட்டாய் படத்தைரொம்ப எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்.

படத்தில் கன்னாபின்னாவென்று கவர்ச்சி களியாட்டம் நடத்தியிருக்கிறாராம் காயத்ரி. படத்தை முடித்து சென்சாருக்கு எடுத்துக்கொண்டு சென்றார்கள்.

படத்தைப் பார்த்த சில பெண் உறுப்பினர்கள் முகத்தைச் சுளித்திருக்கிறார்கள். இது தமிழ்ப் படமா இல்லை வேறு மாதிரியானபடமா என்று கேட்ட அவர்கள் காயத்தரி வருகிற 80 இடங்களில் காட்சிகளை வெட்டோ வெட்டு என்று வெட்டியிருக்கிறார்கள்.

அதிர்ந்து போன தயாரிப்பாளரும், டைரக்டரும், படத்தை நல்லபடியாக எடுத்து விட்டோம். இந்தக் காட்சிகளை எடுத்து விட்டால்படம் போனியாகாது என்று கூறிப் பார்த்துள்ளார்கள். ம்ஹூம், கொஞ்சம் கூட சென்சார் அம்மணிகள் இறங்கி வரவேயில்லையாம்.

என்ன செய்வது என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள் தயாரிப்பாளரும், டைரக்டரும்.காயத்ரியும்தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil