»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

காயத்ரி ஜெயராம் மீண்டும் தமிழ்ப் படங்களில் நிறைய தலை காட்டுவதற்காக என்ன வேடம் என்றாலும் ஓ.கே.என்கிற அளவுக்கு இறங்கி வந்து விட்டார்.

நடன நடிகருடன் சில காலமாக முறைத்துக் கொண்டிருந்த காயத்ரி ஜெயராம் இப்போது அதைத் தூக்கிப் போட்டுவிட்டு, பட வாய்ப்புகளை தேடத் தொடங்கியுள்ளார்.

சின்ன வேடமாக இருந்தால் கூட போதும் என்று கூறி வாய்ப்புகளைத் தேடி வருகிறார்.

தனது முயற்சியின் பலனாக விஜய் நடிக்கும் "வசீகரா"வில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் காயத்ரி ஜெயராம்.டைரக்டர் செல்வபாரதியின் நட்பைப் பெற்றதால் இந்த வாய்ப்புக் கிடைத்ததாம்.

படம் முடிவதற்குள் விஜய்யையும் கவர்ந்து விட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறாராம் கா.ஜெ.

அதேபோல, விஜய், அஜீத், பிரசாந்த் என இளம் ஹீரோக்கள் படங்களுக்கு மட்டுமே இப்போதைக்குமுக்கியத்துவம் தரப் போகிறாராம்.

அப்பத்தான் நிறைய படங்களில் தலை காட்ட முடியும் என்பது அவரது கணிப்பு!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil