»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

காயத்ரி ஜெயராமுக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இப்போது ஒரே கவலை தான். இருவருமே சான்ஸ் கிடைக்காமல்தவித்து வருகின்றனர்.

காயத்ரி ஜெயராம் ஹீரோயினாக நடித்து பல காலமாகிவிட்டது. இவர் நடித்த படங்கள் நன்றாகவே ஓடின.ஆனால், இவரது உயரம் நம் குட்டை ஹீரோக்களை ஓட வைத்துவிட்டது. இதனால் ஹீரோயின் சான்ஸ்கிடைக்கவில்லை.

சமீபகாலமாக துண்டு, துக்கடா ரோல்கள் தான் செய்து கொண்டுள்ளார். இப்போது அதற்கும் பஞ்சமாம். கையில்சான்ஸ் இல்லாததால் மீண்டும் மாடலிங் பக்கம் போய் சேலை விளம்பரங்களில் தீவிரமாக இறங்கிவிட்டார்.

அதே நேரத்தில் கோடம்பாக்கத்தில் சான்ஸ்களைத் தேடி அலையோ அலை என அலைகிறார். லேட்டஸ்ட்தகவலின்படி காயத்ரியின் கையில் ஒரு படம் கூட இல்லை.

இதுவரை உயரமான சில குடுகுடு ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பதைத் தவிர்த்து வந்தார். ஆனால், போகிறபோக்கைப் பார்த்தால் மிக விரைவிலேயே அவர்களுடன் நடிக்க ஒப்புக் கொண்டுவிடுவார் என்று தெரிகிறது.

கிட்டத்தட்ட இதே நிலையில் தான் இருக்கிறார் காயத்ரி ரகுராம். காயத்ரி ஜெயராம் நடித்த படங்களாவது ஓடின.ஆனால், இவர் அடுத்தடுத்து நடித்த எந்தப் படமும் ஓடவில்லை. லாரன்சுடன் நடித்த ஸ்டைல் படம் பெரும்தோல்வியைத் தழுவியது.

இதனால் கவர்ச்சிக்குத் தாவினார். சமீபத்தில் அர்ஜூனுடன் நடித்த பரசுராம் படத்தில் கிரணை தனது கவர்ச்சியால்ஓரம் கட்டிக் காட்டினார். படம் ஓடவில்லை. ஆனாலும் இவரது கவர்ச்சி பேசப்பட்டது.

இதனால் இனி தனக்கு மும்தாஜ் மாதிரி கவர்ச்சி ஆட்டம் போடவாவது வாய்ப்பு வரும் என்று காத்திருந்தார். அதுநடக்கவில்லை. விசில் படம் வரட்டும், பிறகு சான்ஸ்கள் என்னைத் தேடி வரும் என்றார். ஆனால், அந்தப் படம்தியேட்டர்களுக்குப போன வேகத்தை விட அதிக வேகத்தில் திரும்ப வந்துவிட்டது.

இதனால் தெலுங்குப் பக்கம் போய் பார்த்தார். அங்கு சிங்கிள் டான்ஸ் ஆட சான்ஸ் கொடுத்தார்கள். பின்னர்கண்டுகொள்ளவில்லை. இதனால் அங்கிருந்து வெறுத்துப் போய் ஊர் திரும்பிவிட்டார்.

அழகிருக்கிறது, நன்றாக டான்ஸ் ஆடத் தெரியும், கவர்ச்சிக்கும் பஞ்சமில்லை, தந்தையான டான்ஸ் மாஸ்டர்ரகுராமின் ரெக்கமென்டேசன் என்று சகலமும் இருந்தும் காயத்ரி ரகுராமுக்கு கையில் இப்போது ஒரு பட சான்சும்இல்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil