»   »  கூட்டிய கோபிகா!!

கூட்டிய கோபிகா!!

Subscribe to Oneindia Tamil

சம்பளத்தை உயர்த்தியோர் பட்டியலில் லேட்டஸ்டாக கோபிகா சேர்ந்துள்ளார்.

ஒரு படம் ஓடியதுமே நம்ம ஊர் நாயகிகள் சம்பளத்தை ஏற்றி விடுவார்கள். இதுவே நாயகர்கள் என்றால் ஓரிரண்டு படங்கள் ஓடி, மார்க்கெட் வந்ததும் உயர்த்துவார்கள். அடுத்து ஒரு பிரேக் கிடைக்கும்போது இன்னும் கொஞ்சம் உயர்த்துவார்கள்.

நடிகைகள் மட்டும் ஏன் இப்படி உடனுக்குடன் ஊதிய உயர்வை அறிவிக்கிறார்கள் என்றால், சினிமாவில் அவர்களின் வாழ்நாள் ஹீரோக்களை விட குறைவு. ஐந்து வருடமோ அல்லது பத்து வருடமோதான் அவர்களுடைய ஆதிக்கத்தைக் காட்ட முடியும்.

அதிலும் இப்போதெல்லாம் 10 படங்கள் நடித்து முடித்து விட்டாலே அந்த நடிகைகளை மூத்த நடிகையாக பாவிக்கத் தொடங்கி விடுகிறது கோலிவுட்.

இந்த நிலையில் வீராப்பு சூப்பர் ஹிட் ஆகி விட்டதால் கோபிகா தனது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வந்த கோபிகா, கனா கண்டேன் படத்துக்குப் பிறகு தமிழில் மிகவும் செலக்டிவ்வாகத்தான் நடிக்கிறார்.

கடைசியாக அவர் நடித்த படம் எம் மகன். லேட்டஸ்டாக வந்துள்ளது ஓடிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், தெலுங்கிலும் கோபிகாவைத் தேடி இரண்டு படங்கள் ஓடி வந்துள்ளதாம். இரண்டிலும் நல்ல டப்பு தருவதாக சொல்லியுள்ள்ளனராம். இதை வைத்துப் பார்த்த கோபிகா, தமிழிலும் தனது சம்பளத்தை தெலுங்கு லெவலுக்கு ஏற்றி விட்டார்.

இதென்னடா பொல்லாப்பாப் போச்சு என்று தயாரிப்பாளர்கள் புலம்பிக் கொண்டுள்ளனராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil