»   »  சிக்கலில் "தொட்டி ஜெயா"

சிக்கலில் "தொட்டி ஜெயா"

Subscribe to Oneindia Tamil

சிம்புவின் வம்பினால் நொந்து போய் தொட்டி ஜெயா படத்தை டிராப் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.

வித்தியாசமான கெட்டப்பில் சிம்புவும், கோபிகாவும் நடிக்க தொட்டி ஜெயா படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது.ஆனால் இப்போது தொட்டி ஜெயா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நொந்து போயுள்ளார்.

காரணம், சிம்புவின் சில வம்புகள்தான். சிம்புவின் கதை, வசனத்தில் உருவாகி வரும் படம் மன்மதன். இந்தப் படத்தை சிம்புதான் வேறுபெயரில் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். எனவே மன்மதன் வரும்போது வேறு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம்என சிம்பு நினைத்துள்ளார். இதனால் தொட்டி ஜெயா படத்தை தீபாவளிக்குப் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

ஆனால் இதை தொட்டி ஜெயா குழு ஏற்க மறுத்து விட்டது. ஆனாலும் தனது முடிவில் சிம்பு உறுதியாக இருந்துள்ளார். இதனால்கொல்கத்தாவில் ஒரு ஷெட்யூல் முடிவடைந்த நிலையில் தொட்டி ஜெயா பாதியில் நிற்கிறது.

படத்தை இப்படியே விட்டு விடலாமா அல்லது சிம்புவுக்காக காத்திருப்பதா என்று பெரிய குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளார் கலைப்புலிதாணு.

ஆனால் சிம்பு தரப்பில் தீபாவளிக்குப் பிறகு தொட்டி ஜெயா படத்திற்கு நிச்சயம் கால்ஷீட் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தீபாவளிக்குப் பிறகு சிம்புவின் கால்ஷீட் கிடைத்தாலும் கோபிகாவின் கால்ஷீட் கிடைக்காது என்பதுதான் தாணுவின் கவலை.

காரணம் கோபிகாவிற்கு கை நிறைய படங்கள் இருக்கிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இரண்டு படங்களில் ஹீரோயின் கோபிகாதான்.

ஒரு படத்தில் ஹீரோ ஸ்ரீகாந்த். படத்தை இயக்குவது ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த்.

மற்றொரு படத்தில் ஹீரோ தனுஷ். இதுதவிர சேரனின் ட்ரீம்ஸ் தியேட்டர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக கோபிகாநடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குவது சேரன் அல்ல.

ஆட்டோகிராஃப் படத்தில் கேரள போர்ஷன்களை ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன்தான் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.இந்தத் தமிழ்ப்படங்கள் தவிர்த்து, 3 மலையாளப் படங்கள் மற்றும் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க கோபிகா ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையெல்லாம் பார்த்துத்தான் தொட்டி ஜெயா படம் வருவது குறித்த சந்தேகம் திரையுலகில் கிளம்பியுள்ளது. அதற்கு ஆமாம் போடுவதுபோல், கலைப்புலி தாணுவும் விஜய் நடிப்பில் சச்சின் படத்திற்கு பூஜை போட்டுள்ளார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil