»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிந்துபாத் கதையில் வரும் ஹீரோயின் பெயர் கொண்ட நடிகை குறித்த சூடான கிசு கிசு இப்போது கோடம்பாக்கத்தை கலக்கி வருகிறது. அந்த நடிகைக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விட்டதாம். ஊட்டுக்காரர் மும்பையில்இருக்கிறாராம். சிந்துபாத் நடிகை அவ்வப்போது பறந்து சென்று மனாளரை பார்த்து விட்டு வருகிறாராம்.

மந்த்ர நடிகை பிட் ரோல்களில் நடிக்கத் தயாராகி விட்டார். இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவை எடுத்த பிறகு முதல் முதலாக அஜீத் நடிக்க, எழில் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார். சும்மா, இல்லையாம், சூப்பர் டான்ஸாக அது இருக்குமாம்.

யானி நடிகை முக்கிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். ராஜ டைரக்டரை கல்யாணம் செய்து கொண்ட பிறகு இதுவரை இல்லாத அதிசயமாக எக்கச்சக்க படங்களில் நடிக்க புக் ஆகியுள்ளதால், குழந்தை சமாச்சாரத்தை இன்னும் 2 ஆண்டுகளுக்கு தள்ளி வைத்துள்ளாராம். அவ்வளவு படங்கள் கையில் உள்ளதாம்.

திடீர் எனக் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்ட குலுக்கல் டான்ஸ் நடிகை அல்போன்ஸ், டிவி சீரியல்களில் அதிக அளவில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். குறிப்பாக மந்திர, தந்திரங்களை அடிப்படையாகக் கொண்டு வரும் சீரியல்களில் நடிக்கலாம் என்று உள்ளாராம். இவர் நடித்த மந்திர சீரியல் சன் டிவியில் வெற்றி நடைபோடுவதால் இந்த முடிவாம். இது தான் மந்திரக் குலுக்கல்!

டவுசர் நாயகன் ரகசிய கல்யாணம் செய்து கொண்டுள்ளார். நளின நடிகையைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பிருந்தே அத்தை மகளை லவ் பண்ணிக் கொண்டிருந்தாராம் அவர். நளின நடிகையை விவாகரத்து செய்த பிறகு அத்தை மகளையே தற்போது கல்யாணம் செய்து கொண்டுள்ளாராம்.

சிம்பு நடிக்கும் அறிமுகப் படத்தில் மும்ஸ் நடிகைக்கு முக்கியமான ரோல் கொடுக்கவுள்ளாரம் அப்பா இயக்குநர். இந்தப் படத்திற்குப் பிறகு மும்ஸ் இமேஜ் தலைகீழாக மாறும் என்று தலையில் அடித்து சத்தியம் செய்துள்ளாராம் இயக்குனர். இதனால், உடலெல்லாம் புல்லரிக்க சந்தோஷமாக இருக்கிறாராம் மும்ஸ். ஓவர் ஆட்டம் போட்டதால் முதுகு வலியால் சிரமப்பட்டு வருகிறார் மும்ஸ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil