Just In
Don't Miss!
- Sports
கோலியா இப்படி செய்தது? ஏற்றுக்கொள்ளவே முடியாது.. வரிசையாக சுற்றிவளைக்கும் ஜாம்பவான்கள்.. சர்ச்சை!
- Automobiles
என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் உடன் வரும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு
- News
இந்தியாவின் ஜிடிபி 0.4%:: 3வது காலாண்டில் வளர்ச்சி பாதைக்கு திரும்பிய இந்திய பொருளாதாரம்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 27.02.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கதை சொன்ன இயக்கத்துக்கு அப்படி ஷாக் கொடுத்த 'பேபி' ஹீரோயின்.. செம கடுப்பில் படக்குழு!
சென்னை: அந்த ரவுடி பேபி நடிகை மீது செம கடுப்பில் இருக்கிறார்கள், அந்தப் படக் குழுவினர்.
அந்த இளம் நடிகை, டிவி நிகழ்ச்சியில் நடனமாடி புகழ்பெற்றவர். பிறகு மலையாளத்தில் சினிமா வாய்ப்பு கிடைத்தது.
மீட் பண்ணலாமா.. வேட்டி சட்டையில்.. எவ்ளோ அழகா இருக்காரு.. வைரலாகும் ஆரி அர்ஜுனன் போட்டோ!
நடிக்கத் தொடங்கினார். முதல் படத்திலே டீச்சர் வேடம். படம் கவனிக்கப்பட, நடிகைக்கும் வரவேற்பு.

வரவேற்பு இல்லை
பிறகு தமிழுக்கும் வந்தார். தமிழில் அவர் நடித்த படங்களுக்குப் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் அந்த ரவுடி பேபி சாங், நடிகையை அங்கும் இங்குமாக ரசிகர்களிடையே கொண்டு சென்றிருக்கிறது. இருந்தாலும் தமிழில் டாப் ஹீரோ
படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை அவருக்கு.

முட்டி மோதி
இதற்கிடையே தமிழை விட தெலுங்கில், பேபிக்கு எக்கச்சக்க வாய்ப்பு. அங்கு தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இவரிடம் கதை சொல்வது எளிதல்ல. முட்டி மோதிதான் நடிகையை பிடித்து கதை சொல்ல வேண்டும். ஐதராபாத்ல இருக்கேன். அங்க வர்றீங்களா? என்பார் கதை கேட்க.

சுவாரஸ்யமாக
போக வேண்டும். இல்லை என்றால், நடிகையின் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும். ஏகப்பட்ட அலைச்சலுக்குப் பின்பே அவரிடம் கதை சொல்ல முடியும் என்கிறார்கள், சில உதவி இயக்குனர்கள். சமீபத்தில் பருத்திவீரன், ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கும் டைரக்டருக்கு நேர்ந்த கதையை சுவாரஸ்யமாக சொல்கிறார்கள், சில ஏடி-க்கள்!

அலைச்சல், அவஸ்தை
அந்த மித்ர இயக்குனர் இதற்கு முன் சில படங்களை இயக்கி இருக்கிறார். இப்போது அந்த பருத்திவீரனை இயக்க இருக்கிறார். அந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க, ரவுடி பேபியிடம் பேசியிருக்கிறார்கள். சில பல அலைச்சல், அவஸ்தைகளுக்குப் பிறகு உதவி இயக்குனர்களோடு போய் கதை சொல்லி இருக்கிறார்.

அப்புறமா சொல்றேன்
கதையை கேட்ட நடிகை, 'சரி, என் முடிவை நான் அப்புறமா சொல்றேன்' என்றாராம். வந்துவிட்டார் இயக்குனர். பிறகு ஏதும் சொல்லவில்லை. சில நாட்களுக்குப் பிறகு இயக்குனரிடம் பேசி இருக்கிறார், பேபி. படத்தில் அந்த ஹீரோவுக்கு இரண்டு கேரக்டராம். இரண்டில் ஒன்று அட்டகாசமான கேரக்டராம்.

கடுப்பான இயக்கம்
'அந்த அட்டகாச கேரக்டரை, அப்படியே ஹீரோயினுக்காக மாத்துங்க, அந்த கேரக்டர்ல நான் நடிக்கிறேன்' என்றாராம் இயக்கத்திடம். கடுப்பான இயக்கம், சத்தம் போடாமல் போனை வைத்துவிட்டாராம். ஹீரோவுக்காக உருவாக்கப்பட்ட கேரக்டரில் தான் நடிக்கிறேன் என்று சொன்னால் கோபம் வராதா என்ன?

ஆயிரம் காரணம்
வழக்கமாகக் கதை கேட்கும் நடிகைகள், நடிக்கிறேன். நடிக்கலை என்று சொல்வதுதான் வழக்கம். அதற்கு ஆயிரம் காரணம் இருக்கும். ஆனால், ஹீரோவின் கேரக்டரை ஹீரோயினுக்காக மாற்றச் சொல்வதெல்லாம் ஓவர் இல்லையா? என்று கேட்கிறார்கள். இந்த விஷயம் இன்னும் ஹீரோவுக்கு தெரியாது!