ஒரு நடிகைக்காக அடிதடியில் இறங்கிய ஹீரோக்கள்.. ஹோட்டலே நாறி போய்டுச்சாம்.. ஓவர் அட்ராசிட்டி

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் இந்த இரண்டு ஹீரோக்களுக்கும் உறவினர்கள். அதில் ஒருவர் 90களில் டாப் இடத்தில் இருந்தவர். இன்னொருவர் அந்த இடத்தை பிடிக்க கடுமையாக போராடி இப்போது பிடித்திருப்பவர். இரண்டாவது நடிகர் தனது உறவினரைத்தான் மலை போல் நம்பியிருந்தார். ஆனால் ஒரு நடிகை விவகார்த்தில் ஏற்பட்ட மனஸ்தாபம் ஹோட்டலில் அடிதடிவரைக்கும் சென்றுவிட்டதாம்.

90களில் அறிமுகமான அந்த நடிகர் அறிமுகமான சில காலத்திலேயே தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களின் செல்ல பிள்ளையாக மாறினார். அவர்களது இயக்கத்தில் இவர் நடித்த படங்கள் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தன. இதனால் ஃபேவரைட் நடிகராக மாறிவிட்டார். அதுமட்டுமின்றி பெண்கள் விரும்பும் காதல் நாயகனாகவும் வலம் வர ஆரம்பித்தார். கமர்ஷியல், கதைக்கு தேவையான நடிப்பு என இரண்டு குதிரைகளில் லாவகமாக சவாரி செய்ததால் இவர் அடுத்த சகாப்தமாக மாறுவார் என்று கணிக்கப்பட்டிருந்தார்.

உறவினர் நடிகர்: இப்படிப்பட்ட நிலைமையில் இன்னொரு நடிகரும் அதே காலகட்டத்தில் அறிமுகமானார். இவரும் அந்த டாப் நடிகரும் நெருங்கிய உறவினர்கள்வேறு. கண்டிப்பாக தனது சொந்தக்காரர் உதவுவார் என்றுதான் இரண்டாவது நடிகர் நினைத்தார். டாப் நடிகரும் ஆரம்பத்தில் சில உதவிகளை செய்தார்தான். ஆனால் போகப்போக அதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க ஆரம்பித்தார்.

இல்லாத பாடு: இந்த நடிகர் அதனால் ஏமாற்றமடைந்தாலும் மனம் உடைந்து போகாமல் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருந்தார். படாத பாடு பட்டு ஒரு படத்தில் நடித்து மெகா ஹிட் ரிசல்ட்டை பெற்றார். அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்புகள் வர ஒருகட்டத்தில் தனது உறவினரைவிடவும் அதிகம் வளர்ச்சியடைய ஆரம்பித்துவிட்டார். தனக்கு பின்னால் வந்த இவர் தன்னைவிட வளர்ந்துவிட்டாரே என்று உள்ளுக்குள் கொதித்துக்கொண்டிருந்தாராம் டாப் நடிகர்.

Gossip in Kollywood Clash between two Tamil hero relatives over actress leads to hotel brawl

நடிகை மீது இரண்டு பேருக்கும் கண்: சூழல் இவ்வாறு இருக்க ஒரு நடிகை மீது அந்த டாப் நடிகர் பார்வையை வைத்திருக்கிறார். நடிகையும் நடிகரின் வலையில் விழுந்து ஏகப்பட்ட விருந்தை தர; நடிகையின் மடியிலேயே படுத்துக்கிடக்க ஆசைப்பட்டாராம் டாப் நடிகர். இது ஒருபக்கம் இருக்க அதே நடிகை மீது டாப் நடிகரின் உறவினருக்கும் மயக்கம் வர; எப்படியோ பேசி தனது கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறார்.

அடிதடி சண்டை: ஆனால் அந்த நடிகையோ விவரமாக இரண்டு பேரிடமும் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரிடம் பழகிவந்திருக்கிறார். ஒருமுறை டாப் நடிகருடன் ஹோட்டல் ரூமில் விருந்து வைக்க செல்லும்போது உறவினர் நடிகரும் எதார்த்தமாக அந்த ஹோட்டலுக்கு வந்தாராம். விருந்தெல்லாம் முடித்துவிட்டு நடிகரும், நடிகையும் கிளம்பும்போது இவரது கண்கள் சிக்கிவிட; வேண்டுமென்றே எதற்காக என்னுடைய ரூட்டில் தலையிடுகிறாய் என வாக்குவாதம் ஆரம்பித்ததாம். ஒருகட்டத்தில் அந்த வாக்குவாதம் முற்றி அடிதடி வரை சென்றுவிட்டதாம். இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ள அந்த இடமே நாறிவிட்டதாம். இந்த கூத்தையெல்லாம் பார்த்துவிட்டு கடைசியில் இரண்டு பேருமே வேண்டாம் என்று கல்தா கொடுத்துவிட்டு நடிகை கிளம்ப; நடிகர்கள் அசிங்கப்பட்டு அங்கிருந்து கிளம்பினார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X