பழக்கவழக்கத்த மெத்தையோடு நிறுத்திக்கோ.. கல்யாணம்னு சொல்லி கிட்ட வராத.. நடிகருக்கு ஆப்பு வைத்த தோழி
சென்னை: கோலிவுட்டில் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தனது வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த நடிகர் கடந்த வருடத்திலிருந்து சர்ச்சைகளின் பிறப்பிடமாக திகழ்ந்துவருகிறார். அதற்கெல்லாம் காரணம் அவரது வாழ்க்கையில் திடீரென வந்த தோழிதான். அந்த தோழியின் அழகில் மயங்கி தனது மனைவியை பிரிந்த அவர்; இப்போது செய்வதறியாது விழி பிதுங்கி நின்றுகொண்டிருக்கிறாராம்.
சினிமா பின்னணியுள்ள குடும்பத்திருந்து திரைத்துறைக்கு வந்து பவ்யமான பையன் என்று பெயர் எடுத்தவர் அந்த நடிகர். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்த அவர் வெற்றி தோல்வி என இரண்டையும் சந்தித்திருக்கிறார். முதலில் சாக்லேட் பாயாக வலம் வந்த அவர் அடுத்ததாக ஆக்ஷன் படங்களில் நடித்து அதிரடி நாயகன் அவதாரத்தையும் எடுத்தார். அந்த ரிசல்ட் அவருக்கு நல்லபடியாகவே அமைந்தது.
திருமணம் செய்துகொண்ட நடிகர்: அவரது கரியர் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தபோது வாசம் வீசும் நடிகையின் தோழியுடைய மகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு அவர்கள் சூப்பர் கப்பிளாக வலம் வந்துகொண்டிருந்தார்கள். யார் கண் பட்டதோ தெரியவில்லை இரண்டு பேருக்கும் முட்டல் மோதல் ஏற்பட ஆரம்பித்தது.

விவாகரத்து: அந்த முட்டல் மோதல் நாளடைவில் சரியாகிவிடும் என்றுதான் குடும்பத்தினர் நினைத்தார்கள். ஆனால் அது பெரிதாகி பெரிதாகி விவாகரத்தில் சென்று முடிந்தது. இதற்கு அந்த மனைவிதான் காரணம் என்று முதலில் பலரும் எண்ணினார்கள். ஆனால் நடிகரின் வாழ்க்கையில் திடீரென ஒரு தோழி என்ட்ரி கொடுத்ததுதான் உண்மையான காரணம் என்று பின்னர்தான் தெரியவந்தது. அந்த தோழி கொடுத்த சில விஷயங்களால்தான் நடிகர் மதி மயங்கி மனைவியை பிரிந்தாராம்.
கூத்து அடிக்கும் தோழி: நடிகரிடமிருந்து மனைவியை பிரித்த அந்தத் தோழி நடிகருடைய குடும்பத்தையும் தனது வலையில் விழ வைத்துவிட்டாராம். இதற்கிடையே கண்டிப்பாக நாம் திருமணம் செய்துகொள்வோம் என்று சொல்லித்தான் ரிலேஷன்ஷிப்பையே ஆரம்பித்திருக்கிறார் அம்மணி. இதை நம்பி நடிகரும் ஏகப்பட்ட கனவு கோட்டைகளை மனதுக்குள் கட்ட ஆரம்பித்திருக்கிறார். இப்போதோ அம்மணியின் சுயரூபம் தெரியவந்திருக்கிறதாம்.
என்ன நடந்தது?: அதாவது அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி வீட்டிலிருந்து நடிகருக்கு பிரெஷர் போட தொடங்கிவிட்டார்கள். இதனை அவரிடம் நடிகர் சொல்ல; திருமணமா அதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம். நான் இன்னும் சாதிக்க வேண்டும் என தள்ளி போட்டுக்கொண்டே சென்றிருக்கிறார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த நடிகர் 'திருமணம் செய்துதான் ஆக வேண்டும்' என்று கண்டிப்புடன் சொன்னாராம். அம்மணியோ, 'என்னது திருமணமா? பழக்கவழக்கத்தை மெத்தையோடு நிறுத்திக்கொள்வோம்' என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். மேலும் நடிகரின் புகழையும் பணத்தையும் பயன்படுத்தி தோழி செட்டிலாகும் நோக்கத்தில்தான் அவரது வாழ்க்கையில் வந்தார் என்பது இப்போதுதான் புரிகிறதாம். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறாராம் நடிகர்.


Click it and Unblock the Notifications











