பின்னணி பாடகியுடன் காதல்...மரியாதை நடிகருக்கு மீண்டும் திருமண ஏற்பாடுகள்

By Staff

பிரபலமான மரியாதை நடிகர் நீண்ட காலமாக திருமணம் செய்யாமல், சாமியார் போல் சுற்றி வந்தார். இவரின் திருமணம் தள்ளி போவதற்கு என்ன காரணம் என யாரும் சொல்லவில்லை. சரியான பெண் கிடைக்காததால் தான் மரியாதை நடிகரின் திருமணம் தள்ளி போவதாக சொல்லப்பட்டது.

பிறகு விசாரித்த போது, தனக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை என்றும், சாமியாராக வேண்டும் என்பது தான் தனது நீண்ட நாள் ஆசை என கூறி விட்டாராம். இதனால் சினிமா வட்டாரத்தில் பலரும், ஏன் இப்படி முடிவை இவர் எடுத்துள்ளார். என்ன பிரச்சனை இவருக்கு. எதாவது காதல் விவகாரமா அல்லது காதல் தோல்வியா என அரசல் புரசலாக பேச துவங்கி விட்டனராம்.

Gossip...Popular comedy actor fall in love with playback singer

இதை பொறுக்க முடியாமல் மரியாதை நடிகரின் ஜீவநதி தந்தை, கடுமையாக முயற்சி செய்து ஒரு பெண்ணை பேசி முடிவு செய்து விட்டார். இதற்காக மரியாதை நடிகரிடமும் குடும்பத்தில் உள்ள மொத்த பேரும் சேர்ந்து பேசி, பெரும்பாடுபட்டு மரியாதை நடிகரை சம்மதிக்க வைத்து விட்டனராம். அவரும் மனதை மாற்றிக் கொண்டு, சாமியார் வேடத்தை கலைத்து விட்டு, திருமணத்திற்கு தயாராகி விட்டதாக அறிவித்தனர்.

திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்ட போதிலும் பெண் யார், எப்போது கல்யாணம் என எந்த தகவலையும் யாரும் சொல்லவில்லை. ஜீவநதி தந்தை அதற்கு பிறகு மெளனம் ஆனார். எதற்காக காத்திருக்கிறார்கள், இத்தனை வயதான பிறகும் இன்னும் எதற்காக திருமணத்தை தள்ளி போடுகிறார்கள் என்பது புரியாமலேயே இருந்தது.

இதற்கிடையில் மரியாதை நடிகரின் ஏழுமலையான் பெயர் கொண்ட அண்ணன், இவன் மட்டும் நிம்மதியா இருக்கான் என சோஷியல் மீடியாவில் ஜாலியாக கமெண்ட் செய்தார். சரி தம்பியை ஜாலியாக கலாய்க்கிறார் என்று பார்த்தால், திடீரென மரியாதை நடிகர், இனி கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வாழ்க்கை முழுவதும் பிரம்மச்சாரி தான் என என்ட் கார்டு போட்டு விட்டார். இதனால் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றும் புரியாமல் திகைத்து போயினர். பார்த்த பெண் வீட்டில் இவரை வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள் போல என்று கூட பேச்சு அடிபட்டது.

இந்நிலையில் புதிய ட்விஸ்டாக வினையான பின்னணி பாடகி, மரியாதை நடிகரை கட்டிப்பிடித்தபடி எடுத்த போட்டோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, என்னை கவர்ந்து விட்டாய் என்பது போன்ற ரொமான்டிக் வரிகளை எழுதி பரப்பி விட்டுள்ளார். இதை பார்த்து விட்டு, யாருடன் இவர் புதிதாக இருக்கிறாரே என பலரும் கேட்டு வருகிறார்கள்.

இப்போது வினையான பின்னணி பாடகிக்கும், மரியாதை நடிகருக்கும் ரகசியமாக திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். இதனால் மீண்டும் திருமண மூடிற்கு மாறி வருகிறாராம் மரியாதை நடிகர். இதை பார்த்து விட்டு கோலிவுட் வட்டாரங்கள், இதுவாவது நிஜமா இல்லை மறுபடியும் திருமணம் கேன்சல்...பேக் டூ பிரம்மச்சாரி என மாறி விடுவீர்களா என்று கேட்டு வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X