திருமணத்துக்கு பிறகு ரூட்டை மாற்றிய நடிகை.. நடிகர் வீட்டுக்கு அடிக்கடி விசிட்டாம்.. கலக்கத்தில் கணவர்?
சென்னை: தேசிய விருது வென்று தான் ஒரு சிறந்த நடிகை என்று நிரூபித்தவர் அம்மணி. அண்மையில்தான் அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவரும் அவர்; பொதுவெளிகளில் கிளாமர் உடைகளை அணிந்தபடி விஜயம் செய்கிறார். அதுமட்டுமின்றி பெரிய நடிகர் ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி விசிட்டும் அடித்துவருவதால் கணவர் கோபத்தில் இருக்கிறாராம்.
சினிமா பின்னணியோடு உள்ளே வந்த இந்த வெளிச்சமான நடிகை முதல் சில படங்களிலேயே தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். அதுமட்டுமின்றி கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் அவர். அவருக்கான க்ரேஸ் ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரிடமும் எழுந்ததால் இன்னும் பல வருடங்கள் டாப்பில் இருப்பார் என்று கணிக்கப்பட்டிருந்தது.
சறுக்கிய நடிகை: அப்படிப்பட்ட நிலைமையில்தான் ஒரு படத்தில் சவாலான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்த ரோலை அவரால் செய்யவே முடியாது என்று பலரும் அடித்து கூறினார்கள். ஆனால் அம்மணியோ அசால்ட்டாக நடித்து ஸ்கோர் செய்தார். முக்கியமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். விருது பெற்ற கையோடு வாய்ப்புகள் அதிகளவு வரும் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு அதிர்ச்சி தரும் விதமாக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

திருமணம் செய்துகொண்ட நடிகை: இது ஒருபக்கம் இருக்க தமிழ்நாட்டில் இருக்கும் பெரிய ஹீரோ ஒருவருடன் தொடர்ந்து கிசுகிசுவில் சிக்கிவந்தார் அவர். அதுகுறித்து எந்த பதிலும் சொல்லாமல் கடந்த அவர்; அண்மையில் தனது காதலரை திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தின் மூலம் தன் மீது பரப்பப்பட்ட வதந்தி, கிசுகிசுக்களுக்கு தரமான பதிலடியை கொடுத்துவிட்டார் என்றே கருதப்பட்டது.
ரூட்டை மாற்றிய நடிகை: திருமணம் செய்த பிறகு வீட்டில் செட்டில் ஆவார் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் முழு வேகத்தில் கதைகளை கேட்டு பிஸியாக நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.அதேசமயம் அவர் இருக்கும் வேகத்துக்கு தகுந்தபடி பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லையாம். இதனால் என்ன செய்வதென்று யோசித்த அவர்; பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது ஆடை குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறாராம்.
நடிகர் வீட்டுக்கு விசிட்: எவ்வளவுதான் ஆடைகளை குறைத்தாலும் வாய்ப்புகள் அதிகரிக்கவில்லையே என்று சோர்ந்து போன அவர்; அந்தப் பெரிய நடிகருடனான அந்த மாதிரியான உறவை மீண்டும் ஆரம்பித்திருக்கிறாராம். வாரத்தில் கண்டிப்பாக இரண்டு முறையாவது நடிகரின் வீட்டுக்கோ, கேரவனுக்கோ சென்று தேவையானவற்றை செய்துகொண்டு; தனக்கு எப்படியாவது பெரிய இயக்குநர்களிடம் சொல்லி வாய்ப்பு வாங்கி கொடுக்குமாறு கோரிக்கையை வைக்கிறாராம். நடிகையின் அழகில் மயங்கிய நடிகரும் தனக்கு தெரிந்த அத்தனை இயக்குநர்களிடமும் சிபாரிசு செய்ய ஆரம்பித்திருக்கிறாராம். நடிகை மீண்டும் அந்த ரூட்டில் சென்றதை பார்த்த புது மாப்பிள்ளையோ செய்வதறியாது திகைத்துவருகிறாராம்.


Click it and Unblock the Notifications











