முதல் மனைவி சாபம் தான் செல்லும்.. செகண்ட் சேனல் சாபம் எல்லாம் செல்லாது.. நடிகரை தேற்றிய பிரபலம்?
சென்னை: ஹீரோவாக நடித்து பிரபலமான நபரின் நிலைமை சமீப காலமாக செகண்ட் சேனலின் டார்ச்சர் காரணமாக ரொம்பவே பரிதாபத்துக்குரிய நிலையில் இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. இந்நிலையில், சமீபத்தில் பிரபலம் ஒருவர் அந்த நடிகரை நன்றாகவே தேற்றிவிட்டார் என்றும் அதன் காரணமாகவே கலங்காமல் கலகலப்பாக வலம் வருகிறார் அந்த நடிகர் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை விவாகரத்து, 2வது திருமணம் என்பதெல்லாம் அந்த காலத்தில் இருந்தே இருந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒருவரை ஒருவர் பிரிந்து செல்வது, ஏமாற்றுவது, மனைவி இருக்கும் போதே மற்றொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருப்பது, கருவை கொடுப்பது என அத்தனை கேடு கெட்ட செயல்களையும் ஆசையின் காரணமாக மனிதர்கள் செய்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

ஆண்கள் மட்டுமின்றி சில பெண்களும் எப்படியாவது அடுத்தவரின் புருஷனை மடக்கி அவனது சொத்தில் மஞ்சக் குளிக்க வேண்டும் என நினைப்பதும், அப்பாவியாக ஒன்றுமே தெரியாமல் செகண்ட் சேனலாக சென்று மாட்டிக் கொண்டு புலம்புவது என ஏகப்பட்ட கதைகள் ரிப்பீட் மோடில் இப்போதும் வந்துக் கொண்டு தான் இருக்கின்றன.
லாக் பண்ண மனைவி: ஆரம்பத்தில் ஆட்டம் போட்ட கணவன் பற்றி பெரிதாக தெரிந்துக் கொள்ளாமல் இருந்த மனைவி ஒரு கட்டத்தில் கணவரை எப்படி லாக் செய்ய வேண்டுமோ அந்த விஷயத்தில் லாக் செய்து அவருடன் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். ஆனால், இடைபட்ட காலத்தில் கணவர் பார்த்த சில பலான வேலைகள் காரணமாக கர்மா இஸ் பூமரங் போல அவரை சுற்றி ஏகப்பட்ட பிரச்னைகள் வெடித்துக் கொண்டே இருக்கிறது.
2வது மனைவி சாபம் செல்லாது: தொடர்ந்து தனக்கும் தனது மனைவிக்கும் 2வது மனைவி சாபம் கொடுத்து வருகிறார் என்றும் இதனால் தனது எதிர்கால வாழ்க்கை பாதிக்குமா? என சமீபத்தில் பிரபல ஜோதிடர் ஒருவரை சந்தித்து ஆலோசனை கேட்டுள்ளாராம் நடிகர். ஆனால், முதல் மனைவியின் சாபம் தான் கொடியது என்றும் 2வது மனைவி சாபம் எல்லாம் பெருசா செல்லாது, எதுக்குமே கவலைப்படாமல் இருங்க, ஒன்றும் பயப்பட வேண்டாம் என நடிகரை தேற்றியுள்ளாராம் அந்த பிரபல ஜோதிடர்.


Click it and Unblock the Notifications











