»   »  சம்பள பாக்கிக்காக ஆடியோ ரிலீஸுக்கு வர மறுத்த வாரிசு ஹீரோ!

சம்பள பாக்கிக்காக ஆடியோ ரிலீஸுக்கு வர மறுத்த வாரிசு ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திலக வாரிசின் அடுத்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடந்தது. சொந்த தாத்தா பெயரையே டைட்டிலாக கொண்ட படத்தின் இந்த நிகழ்ச்சிக்கு லேட்டாகத்தான் வந்தார் ஹீரோ. காரனம் ட்ராஃபிக் என சொல்லப்பட்டாலும் உள்ளே வேறு ஒரு காரணம் இருக்கிறதாம். அது சம்பளம்.

படம் டப்பிங் எல்லாம் முடிந்து ரிலீஸுக்கே தயாராகி விட்டது. இன்னும் பேசிய சம்பளத்தில் ஒரு பகுதி தரவில்லையாம் தயாரிப்பாளர். வியாபாரம் ஆனதும் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதனால் ஆடியோ ரிலீஸுக்கு வருகிறேன் என்று முதலில் வாக்குறுதி தந்துவிட்டு கடைசி நேரத்தில் தயாரிப்பாளரை தவிக்க விட்டாராம் ஹீரோ. அவசரம் அவசரமாக சம்பளத்தை செட்டில் செய்த பின்னரே நிகழ்ச்சிக்கு வந்தார் ஹீரோ. ஹீரோவும் தயாரிப்பாளரும் நிகழ்ச்சியில் முகம் கொடுத்தே பேசிக்கொள்ளவில்லை.

வளரும்போதே இப்படியா...?

English summary
Grand son of legendary actor has tried to boycott the audio release function of his new movie due salary issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X