ஓபனிங் கூட இல்லை.. பாஸ் நடிகரை நம்பி பல கோடிகளை கொட்டுவது வீண்.. பேக் அடித்த தயாரிப்பாளர்கள்!
சென்னை: உச்ச நடிகர் போல மொக்கைப் படத்தை கொடுத்தும் மிகப்பெரிய ஓபனிங்கை எல்லாம் பாஸ் நடிகரால் ஒரு நாளும் அள்ளவே முடியலையே என்பதை தயாரிப்பாளர்கள் புரிந்துக் கொண்ட நிலையில், அவரை வைத்து பட்ங்களை பண்ண யாருமே முன் வருவதில்லை என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நல்ல கதைகளையும் வித்தியாசமான முயற்சிகளையும் பார்த்து பிரமித்து எல்லாம் ரசிகர்கள் தியேட்டர்களுக்குச் செல்வதில்லை. தயாரிப்பாளர்களும் அதுபோன்ற விபரீத விளையாட்டுகளை பணத்தை வைத்து விளையாடுவதில்லை.

அனைவரது ஒரே நோக்கம் பிசினஸ் மட்டும் தான். போட்ட காசை விட ஒரு ரூபாய் எக்ஸ்ட்ரா வந்தாலும் சந்தோஷம் தான். ஆனால், சமீபத்தில், பாஸ் நடிகரை வைத்து எடுத்த படம் அதள பாதாளத்தில் விழுந்து தயாரிப்பாளருக்கு அடிமேல் அடியை வாங்கிக் கொடுத்த நிலையில், அதை பார்த்த மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் அய்யோ அவரா வேண்டவே வேண்டாம் எனும் அளவுக்கு பின் வாங்குவதாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.
ஓபனிங்கே இல்லை: என்னதான் ஒரு மாதமாக ப்ரோமோஷனுக்கு செலவு செய்து கலர் கலரா ரீல் விட்டாலும் நடிகரின் தகாத வாழ்க்கைப் படத்தை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்து புக் மை ஷோ சர்வரை எல்லாம் கிராஷ் செய்து முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகளை புக் செய்து கூட ஏமாறாமல் உஷாராக காத்திருந்து நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததும் தப்பிச்சோம் சாமி என எஸ்கேப் ஆகிவிட்டது கோலிவுட்டில் அந்த படத்துக்குப் பிறகும் இன்னமும் பாஸ் நடிகருக்கான ஓபனிங் மார்க்கெட் இல்லை என்பதை தெளிவாக காட்டி விட்டதை தயாரிப்பாளர்கள் புரிந்துக் கொண்டனர்.
பெரிய பட்ஜெட் எல்லாம் முடியாது: இனிமேல் பாஸ் நடிகரை மட்டும் நம்பி பெரிய பட்ஜெட் படங்களை எல்லாம் எடுக்கவே முடியாது என்றும் குறைந்த பட்ஜேட்டில் வேண்டும் என்றால் படம் பண்ணலாம் என்கிற நிலைமை உருவாகி இருப்பதாக கூறுகின்றனர். உச்ச நடிகர் போல இவரும் இனிமேல் மல்டி ஸ்டார்களை மட்டுமே நம்பி தனது படங்களில் பல ஊர் நடிகர்களை இணைத்துக் கொண்டால் தான் தயாரிப்பாளர்கள் அவர் பக்கமே போவார்கள் என்று கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











