அந்த மலையாள நடிகை அப்படி கவர்ச்சி காட்ட அதுதான் காரணமா? அதுக்காக என்னலாம் பண்ண வேண்டியிருக்கு!

By Staff

சென்னை: மற்ற நடிகைகள் எல்லாம் சென்று விட்டு வந்த அந்த இடத்திற்கு சீசனே இல்லாத நிலையில், மலையாள நடிகை டூர் அடித்திருப்பதற்கு பின்னாடி பெரிய சினிமா அரசியலே இருக்கு என சொல்கின்றனர்.

Recommended Video

Jayam Ravi மனைவியிடம் சண்டை போடும் Dhanush? | Trisha, Aarthi

வழக்கமாக எங்கே டூர் போனாலும் இந்த அளவுக்கு போட்டோக்களையும் வீடியோக்களையும் அந்த நடிகை ஷேர் செய்ததே இல்லை.

இந்நிலையில், இப்படி வரிந்துக் கட்டி போஸ்ட்டுகளை போடுவதற்கு முக்கிய காரணம் ஒன்று இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்துள்ளன.

மலையாள நடிகை டூர்

மலையாள நடிகை டூர்

சீசனே இல்லாத நிலையில், மலையாள நடிகை திடீரென டூர் அடித்திருப்பது ரசிகர்களை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. பொதுவாக இது போன்ற இடங்களுக்கு நல்லா வெயில் வெளுத்து வாங்கும் போது தான் மற்ற நடிகைகள் டூர் செல்வது வழக்கம். ஆனால், குளிர் அடிக்கும் காலம் மற்றும் கொரோனா பாதிப்புகள் இருக்கும் நேரத்தில் அந்த நடிகை டூர் அடித்திருப்பதற்கு பின்னணியில் பலே விஷயம் ஒன்று இருப்பதாக கூறுகின்றனர்.

ஆஃபர் கொடுக்கும் போது கூட

ஆஃபர் கொடுக்கும் போது கூட

கடந்த சில ஆண்டுகளாக நடிகைகளுக்கு பாதி டிக்கெட்டில் சுற்றுலாவை பெருக்க அந்த சுற்றுலாத்தளம் அழைப்பு விடுக்க ஏகப்பட்ட நடிகைகள் எறும்பு செல்வது போது போல ஏரோபிளேன் ஏறி அந்த தீவுக்கு சென்று செம பார்ட்டி செய்து வந்தனர். ஆனால், அப்போது கூட இந்த நடிகை அந்த இடத்திற்கு செல்லாத நிலையில், தற்போது செல்ல என்ன காரணம் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

கவர்ச்சி வீடியோக்கள்

கவர்ச்சி வீடியோக்கள்

ஆபாச எல்லைக்கே செல்லும் அளவுக்கு ஆடைகளை முற்றிலுமாக துறந்தபடியும் அங்கங்களை அதீத அளவில் காட்டியபடியும் போட்டோக்கள் மட்டுமின்றி வீடியோக்களாக போட்டுத் தள்ளி வருகிறார் அந்த மலையாள நடிகை. ஏற்கனவே தாராளமான நடிகை என்பதால் இந்த நேரம் இன்னும் தாராளம் காட்டுவது அவர் நடித்து விரைவில் ரிலீசாக உள்ள அந்த படத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

2 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே ஒரு படம் மட்டுமே ஓடிய நிலையில், அதற்கு அடுத்து வந்த எல்லா படங்களும் அந்த ஒல்லி நடிகருக்கு கல்லா கட்ட தவறியது. அதே போல இயக்குநருக்கும் அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் அட்டு ஃபிளாப்பாகி வரும் நிலையில், ரசிகர்களை கொஞ்சமாவது ஈர்க்க இந்த கவர்ச்சி விளம்பரம் உதவும் என நினைத்து தயாரிப்பு நிறுவனமே தற்போது இப்படியொரு ஏற்பாடை செய்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்.

நல்லா இருந்தா

நல்லா இருந்தா

படம் நல்லா இருந்தா ஓடப் போகுது, அதற்கு எதற்கு இப்படியொரு கவர்ச்சி புரமோஷன் என கேள்விகளும் எழுந்து வருகின்றன. படம் நன்றாக இருந்தால் தைரியமாக தியேட்டரில் வெளியிட மாட்டார்களா? என்கிற பதில்களும் அந்த கேள்விகளுக்கு விடையாக விழுந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X