»   »  ஷெரீன்- தருண் கோபி?

ஷெரீன்- தருண் கோபி?

Subscribe to Oneindia Tamil
Click here for more images
ஷெரீனுக்கும், இயக்குநர் தருண் கோபிக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டிருப்பதாக கோலிவுட்டில் சரமாரியாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லையே என்று புலம்பியபடி மறுக்கிறாராம் தருண் கோபி.

திமிரு மூலம் இயக்குநரானவர் மதுரைக்கார தருண் கோபி. முதல் படமே சூப்பர் ஹிட் ஆகி விட்டதால் அடுத்த படத்தையும் அட்டகாசமாக கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் கோபிக்கு.

அடுத்த படத்தையும் விஷாலை வைத்தே இயக்கலாம் என எண்ணியிருந்தார் கோபி. ஆனால் அதற்குள் விஷாலுக்கும், தருண் கோபிக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விட்டதால் விஷாலை டிராப் செய்து விட்டார்.

நல்ல ஹீரோவுக்காக காத்திருந்தபோதுதான் சிம்பு, தருண் கோபியை அணுகினார். இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என சிம்பு கூறியபோது சந்தோஷத்துடன் அதை ஏற்றுக் ெகாண்டார் கோபி.

இப்போது இருவரும் இணைந்து காளை என்ற படத்தை இயக்கிக் ெகாண்டிருக்கின்றனர். படம் மெதுவாக வளரும் நிலையில் கூடவே தருண் கோபியும், ஷெரீனும் காதலித்துக் கொண்டிருப்பதாகவும் ஒரு பேச்சு படு ஸ்டிராங்காக கிளம்பியுள்ளது.

இதுகுறித்து தருண் கோபியிடம் கேட்டபோது, அய்யய்யோ, யார் சார் கிளப்பி விடுறாங்க. உணமையில் நடந்ததே வேறு என்று அக்குவேறு ஆணி வேராக உண்மையை விளக்கினார்.

அதாவது சிம்பு வீட்டுக்கு காளை பட டிஸ்கஷன் தொடர்பாக தருண் கோபி ஒருமுறை போயிருந்தார். அங்கு சிம்புவைப் பார்ப்பதற்காக ஷெரீன் அங்கு வந்துள்ளார்.

ஷெரீனும், தருண் கோபியும் ஒருவரை ஒருவர் பார்த்து ஹாய் கூறிக் கொண்டார்கள். பின்னர் வடபழனியில் உள்ள ஒரு காபி ஷாப்பில் இருவரும் 'எதேச்சையாக' சந்தித்துள்ளனர். அப்போது எனக்கு டைரக்டராகும் ஆசை உள்ளது. உங்களிடம் உதவியாளராக சேர்ந்து கொள்ளவா என்று கேட்டுள்ளார் ஷெரீன்.

அதற்கு தருண், இப்ேபாது நான் காளை படத்தில் படு பிசியாக இருக்கிறேன். முடிந்ததும் பார்க்கலாமே என்று கூறியுள்ளார். அதன் பிறகு இருவரும் சந்திக்கவே இல்லையாம். இது தருண் கோபியின் மறுப்பு.

ஆனால் நிஜத்தில் அப்படி இல்லையாம். இருவரும் நல்ல தோழமையுடன் உள்ளனராம். பல இடங்களிலும் இருவரையும் சேர்ந்து பார்க்க முடிகிறதாம்.

இந்த விவகாரத்தால்தான் சிம்புவுக்கும், தருண் கோபிக்குமே கூட இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று கூட செய்தி வந்தது.

உண்மை என்னவோ?

Read more about: sherin

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil