தயாரிப்பு தரப்பு மீது செம கடுப்பு.. அந்த ஒரு வார்த்தைக்காகத் தான் கம்முனு இருக்காராம் மாஸ் நடிகர்!

By Staff

சென்னை: பான் இந்தியா படம் என சொல்லிவிட்டு உள்ளூரிலேயே புரமோஷன் பண்ணாமல் நடிகரை செம அப்செட்டில் ஆக்கி உள்ளது அந்த தயாரிப்பு நிறுவனம்.

மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக நிகழ்ச்சிகளில் நடிகர் கலந்து கொள்ளவே கூடாது என ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டு விட்டார்களாம்.

ஆனால், இவ்வளவு நடந்தும் மாஸ் நடிகர் கம்முனு இருக்க அந்த ஒரு வார்த்தை தான் காரணம் என்கின்றனர்.

மைக்கை புடுங்கிட்டாங்க

மைக்கை புடுங்கிட்டாங்க

மாஸ் நடிகர் ஆண்டுக்கு ஒரு முறை தனது திரைப்பட விழாவில் மட்டும் தான் அரசியல், பொருளாதாரம், சினிமா மற்றும் ரசிகர்கள் என பல விஷயங்களை மைக் பிடித்து பேசுவார். ஆனால், இம்முறை அந்த மைக்கையும் அவரிடம் இருந்து புடுங்கி ஒரு டப்பா அறைக்குள் நடிகரை அடைத்து விட்டது ரசிகர்களுக்கு மட்டுமின்றி அந்த நடிகருக்கும் அவரை சூழ்ந்திருக்கும் இயக்கத்துக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புரமோஷனே கிடையாது

புரமோஷனே கிடையாது

மேலும், நடிகரின் திரைப்படம் வெளியாவதே திருவிழா போல இருக்கும் நிலையில், இந்த முறை எந்தவொரு பெரிய கொண்டாட்டத்திற்கும் தயாரிப்பு நிறுவனம் திட்டமிடவே இல்லை. படத்தை பார்த்து விட்டு அப்செட்டில் இப்படியொரு முடிவுக்கு தயாரிப்பு வந்ததா? அல்லது மேலிடத்தில் வந்த அழுத்தம் தான் காரணமா என பெரும் குழப்பமே நீடித்து வருகிறது.

செம கடுப்பில் நடிகர்

செம கடுப்பில் நடிகர்

இதன் காரணமாக தயாரிப்பு தரப்பு மீது மாஸ் நடிகர் செம கடுப்பில் உள்ளாராம். ஆனால், அந்த ஒருவரின் வார்த்தை நடிகரை இந்த அளவுக்கு இந்த விஷயத்தில் கம்முனு இருக்க வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. தயாரிப்பு தரப்பின் தலைமை அதிகாரி தனிப்பட்ட முறையில் மாஸ் நடிகரை சந்தித்து தனது சூழ்நிலையையும் சிக்கலையும் புரிய வைத்துள்ளாராம்.

இயக்குநருக்கு வாழ்க்கை

இயக்குநருக்கு வாழ்க்கை

மேலும், நடிகர் இந்த விவகாரத்தில் அமைதி காக்க மற்றொரு நபரும் முக்கிய காரணம் என்கின்றனர். அது வேறு யாரும் இல்லை படத்தின் இயக்குநர் தான். மாஸ் நடிகர் படத்தைத் தொடர்ந்து அதே நிறுவனத்துடன் உச்ச நடிகர் படத்தையும் அந்த இயக்குநர் இயக்கவுள்ள நிலையில், அதற்கு அச்சாணியாக இருந்த நடிகரே இயக்குநரின் வாழ்க்கைக்கு பிரச்சனை வர வைக்க வேண்டாம் என்று தான் அமைதி காத்து வருகிறாராம்.

எப்படி இருந்தாலும் ஓடும்

எப்படி இருந்தாலும் ஓடும்

மேலும், தனது படம் எப்படி இருந்தாலும், எந்த புரமோஷனுமே இல்லாமல் வந்தாலும் ஓடும் என்பதை தனக்கு இருக்கும் ரசிகர் பலம் கொண்டு புரிந்து வைத்திருக்கும் நடிகர் இந்த பிரச்சனைகளை பெரிதாக கண்டு கொள்ளாமல் அடுத்த பட வேலைகளை கவனிக்க முடிவு செய்து விட்டாராம். மேலும், இயக்குநரிடமும் இது உன் படம் நீ பார்த்துக்க என பொறுப்பை கொடுத்து விட்டு விலகி விட்டாராம்.

இனிமே நோ சான்ஸ்

இனிமே நோ சான்ஸ்

அந்த தயாரிப்பு தரப்பு ரொம்பவே மெனக்கெட்டு தான் மாஸ் நடிகரின் கால்ஷீட்டை உறுதி செய்தது. ஆனால், மேலிடத்தில் இருந்து திடீரென கிளம்பிய அழுத்தம் காரணமாக எந்தவொரு பெரிய விஷயத்தையும் பட ரிலீசுக்கு முன்பாக செய்ய முடியாமல் போனது. இந்நிலையில், இந்த முறை இதை இப்படியே அமைதியாக போக விட்ட நடிகர் இனிமேல், எப்பவுமே கால்ஷீட் கேட்டு தன்னிடம் வர வேண்டாம் என்பதையும் தெளிவாக சொல்லி விட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X