நம்பர் நடிகைக்கு இப்படி ஒரு வியாதியா... வீட்டை எதிர்த்து அவசர கல்யாணத்திற்கு இதுதான் காரணமோ ?

By Staff

சென்னை : நம்பர் நடிகையும் அந்த டைரக்டரும் பல ஆண்டுகளாக காதலித்து வருவது ஊர் உலகத்துக்கே தெரியும். எப்போது கல்யாணம் என அனைவரும் கேட்டு, கேட்டு அசந்து போய் விட்டனர். ஆனால் நம்பர் நடிகை பிடிவாதமாக வாயே திறக்காமல் இருந்து விட்டார்.

இதனால் ஒரு கட்டத்தில் இவர்கள் காதல் பாதியிலேயே பிரேக் அப் ஆகி விடும். இவர்கள் கல்யாணம் செய்வதற்காக காதலிக்கவில்லை போல என பல விதமாக பேச்சுக்கள் எழுந்தது. ஆரம்பத்தில் காதலிப்பதாக சொன்ன நம்பர் நடிகையும், டைரக்டரும், பிறகு ஒரே வீட்டில் சேர்ந்து வாழ துவங்கி விட்டனர்.

வெளிநாடு உள்ளிட்ட பல இடங்களுக்கும் ஒன்றாக சேர்ந்து சென்று வந்தவர்கள், கல்யாணத்தை பற்றி மட்டும் மூச்சே விடாமல் இருந்தனர். ஆனால் திடீரென சமீபத்தில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நம்பர் நடிகை மோதிரத்தை காட்டினார். பிறகு விரைவில் கல்யாணம் என்றவர்கள், தற்போது ஒரு வழியாக கல்யாண தேதியையும் அறிவித்து விட்டார்கள்.

நம்பர் நடிகையை எதிர்க்கும் குடும்பம்

நம்பர் நடிகையை எதிர்க்கும் குடும்பம்

பல வருடங்களாக கல்யாணத்தை தள்ளி போட்டு வந்தவர்கள், திடீரென கல்யாண தேதியை முடிவு செய்ததற்கு காரணம், அந்த படம் முடிந்த பிறகு திருமணம் என ஏற்கனவே பிளான் பண்ணியது தான் என கூறினார்கள். ஆனால் உண்மையில் காரணம் அது இல்லையாம். நம்பர் நடிகை தொடர்ந்து திருமணத்தை தள்ளி போட்டு வந்ததால், டைரக்டர் குடும்பத்தில் அவர் மீது செம கோபத்தில் இருந்தார்களாம். அவரை வேண்டாம் என்று கூட முடிவு செய்து விட்டார்களாம். ஆனால் டைரக்டர் தான் பிடிவாதமாக இருந்தாராம்.

கல்யாணத்திற்கு இது தான் காரணமா

கல்யாணத்திற்கு இது தான் காரணமா

தங்களின் திருமண தேதியை மீடியாக்களுக்கு சொன்னவர்கள், சொந்த குடும்பத்திற்கு சொல்லவே இல்லையாம். இதனால் இவர்கள் திருமணத்திற்கு டைரக்டர் வீட்டில் பயங்கர எதிர்ப்பாம். ஆனால் நடிகை திடீரென திருமண முடிவுக்கு வந்ததற்கு அவருக்கு இருக்கும் வியாதி தான் காரணமாம். அந்த வியாதியால் தான் தோல் சுருங்கி, ஆளே டல் அடித்து காணப்படுவதுடன், மிகவும் வயதான தோற்றத்திற்கு வந்து விட்டாராம். தனது தோல் வியாதிக்கு சிகிச்சை எடுக்க நம்பர் நடிகை முடிவு செய்திருக்கிறாராம்.

இது தான் பிளானா

இது தான் பிளானா

சிகிச்சைக்கு சில மாதங்கள் ஆகும் என்பதால் திடீரென சினிமாவிற்கு பிரேக் விட்டால் எங்கே தனக்கு இருக்கும் வியாதி பற்றிய தகவல் வெளியில் கசிந்து விடுமோ என நினைத்து தான் கல்யாண ஐடியாவை கையில் எடுத்தாராம். கல்யாணம் முடித்த கையோடு இவர்கள் ஏதாவது வெளிநாட்டிற்கு ஹனிமூன் செல்வார்கள் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அப்படி போக போவதில்லையாம். கல்யாணம் முடிந்ததும் சினிமாவிற்கு 6 மாதங்கள் பிரேக் விட போகிறாராம் நம்பர் நடிகை.

இந்த வயசுல எதுக்கு அது

இந்த வயசுல எதுக்கு அது

இந்த 6 மாத காலத்தை சிகிச்சைக்காக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளாராம். கேரளாவில் இயற்கை முறையில் சிகிச்சை செய்து, தனது பழைய அழகை திரும்ப கொண்டு வர போகிறாராம். அதோடு, இந்த வயசுல எதுக்கு ஹனிமூன் எல்லாமே என நம்பர் நடிகை சொல்லி விட்டதால், டைரக்டரும் வேறு வழியில்லாமல் ஓகே சொல்லி விட்டாராம். இதனால் திருமணம் முடிந்ததும் நம்பர் நடிகை சிகிச்சைக்கு சென்று விடுவாராம். டைரக்டரும் அவருடன் செல்ல போகிறாரா அல்லது அந்த பெரிய நடிகரின் படத்தை இயக்கும் வேலையை செய்ய போகிறாரா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறது நம்பர் நடிகைக்கு மிக நெருங்கிய வட்டாரங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X