»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அம்மா நடிகை லட்சுமிக்குப் போட்டியாக மகள் நடிகை ஐஸ்வர்யாவும் திருமணக் களத்தில் குதித்துள்ளார்.

அதிகாரப்பூர்வமாக ஒரு முறை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்தார், அதன் பிறகு ஒருவருடன் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்தார். இப்போது 3-வது முறையாக ஒருவரை கரம் பிடிக்கவுள்ளார்.

ஐஸ்வர்யாவுக்கும், தன்வீர் அகமது என்பவருக்கும் இடையே முதன் முதலில் காதல் ஏற்பட்டது. தன்வீரைக் கைப்பிடிக்க ஐஸ்வர்யா முடிவுசெய்தபோது அதை லட்சுமி எதிர்த்தர். தன்வீர் நடத்தை சரியில்லாதவர் என்று லட்சுமி கூறினார். ஆனால் அம்மாவின் வாதத்தை நிராகரித்தஐஸ்வர்யா, தாயையும் மீறி தன்வீரைக் கைப்பிடித்தார். தன்வீருக்கும், அவருக்கும் இடையே அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

இந் நிலையில் தன்வீர் போதைப் பொருளுக்கு அடிமை என்பது தெரிய வந்தது. ஆனால் ஐஸ்வர்யாவையும் போதைப் பொருளுக்குஅடிமையாக்கி விட்டார் தன்வீர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு போதையிலிருந்து மீண்ட ஐஸ்வர்யா தன்வீரை விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார். படங்களிலும் அவ்வப்போது நடிக்க ஆரம்பித்தார். அப்போது அந்தகம்ப்யூட்டர் நிறுவன உரிமையாளருக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர். இதுவும்நீடிக்கவில்லை. இருவரும் பிரிந்தனர். பாட்டி வீட்டிற்குக் குடி பெயர்ந்தார் ஐஸ்வர்யா.

இந் நிலையில் ஐஸ்வர்யாவுக்கும், காலம் சென்ற நடிகர் கராத்தே மணியின் மகன் ராஜு என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். வரும் 24ம் தேதி மகாபலிபுரம் அருகே இருவரும் திருமணம்செய்துகொள்கின்றனர்.

இந்தத் திருமணத்திற்கு லட்சுமி அழைக்கப்பட்டுள்ளாரா என்று தெரியவில்லை. ஆடம்பரம் இல்லாமல் குடும்ப நண்பர்கள் மட்டுமே இந்தகல்யாணத்தில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

கராத்தே மணிக்கும் மலையாள மற்றும் தமிழ் நடிகையான பிரமிளாவுக்கும் இருந்த அந்த மாதிரி தொடர்பு உலகம் அறிந்தது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil