»   »  விக்ரமுக்கு நோ சொன்ன ஜோ

விக்ரமுக்கு நோ சொன்ன ஜோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரமுடன் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்து விட்டார் ஜோதிகா.

கோலிவுட்டில் பென்ஸ் கார் வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் ஜோதிகாவும் ஒருவர். அந்தக் கார் மீது ஜோவுக்குஅலாதி பிரியம். எங்கு சென்றாலும் அதில் பயணிப்பதுதான் வழக்கம்.

சந்திரமுகி படப்பிடிப்புக்கு கூட பென்ஸ் காரில்தான் சென்று வருகிறார். அண்மையில் படப்பிடிப்பு முடிந்து திரும்பி வரும்போது, ஓரிடத்தில்குவித்து வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளில் மோதி, காரின் ஒரு பகுதி டேமேஜ் ஆகிவிட்டது.

இதனால் ஜோதிகா ஒரு வாரத்திற்கு அப்செட் ஆகியிருந்தார். சரி, கதைக்கு வருவோம்.

சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக நடிகைகள் எல்லோரும் ஜோடி சேரத் துடிக்கும் நடிகர் விக்ரம். காரணம் இப்போது சினிமாபந்தயத்தில் ஓடுகிற குதிரை அவர்தான்.

ஆனால் விக்ரமுடன் நடிக்க மாட்டேன் என்று ஒரு நடிகை கூறியுள்ளார். அது நம்ம ஜோதான்.

விக்ரமுடன் இணைந்து ஜோதிகா தூள் மற்றும் அருள் என இரு படங்களில் நடித்துள்ளார். விக்ரமுக்கு சரியான ஜோடி ஜோதிகாதான் என்றுகோலிவுட்டிலும் வர்ணிக்கப்பட்டது.

இந் நிலையில் அருள் படத்தில் ஜோதிகா நடித்துக் கொண்டிருந்தபோது இருவரைப் பற்றியும் பரபரப்பான வதந்தி பரவியது. இதனால்ஜோதிகாவின் காதலரான நடிகர் சூர்யா அப்செட் ஆகி, ஜோதிகாவுடன் பேச மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இருவரும் பிரியப் போகிறார்கள் என்று கூட வதந்தி பரவியது. பின்னர் இருவரும் பேசி சமாதானம் ஆகி விட்டனர். இதைத் தொடர்ந்துமிகவும் செலக்ட்டிவாக படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜோதிகா.

சமீபத்தில் வெளியான மன்மதனில் கூட சிம்புவுடன் நெருக்கமாக நடிக்க மறுத்து விட்டார் ஜோதிகா. இந் நிலையில் மீண்டும் விக்ரமுடன்நடிக்க ஒரு வாய்ப்பு ஜோதிகாவைத் தேடி வந்துள்ளது.

உடனடியாக இந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம் ஜோதிகா. எதற்கு வம்பு என்றுதான் இந்த வாய்ப்பை ஜோதிகா தவிர்த்து விட்டாகக்கூறப்படுகிறது.

தற்போது சூர்யாவிற்கு ஜோடியாக மாயாவி படத்திலும், பிரபுவுக்கு ஜோடியாக சந்திரமுகி படத்திலும் ஜோதிகா நடித்து வருகிறார்.இரண்டுமே பெரிய பேனர் படங்கள்.

அதுமட்டுமல்லாமல் தனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள் என்பதால்தான் இந்தப் படங்களை ஒத்துக் கொண்டார். இதற்கிடையே வந்தவேறு சில வாய்ப்புகளையும் ஜோதிகா நிராகரித்துவிட்டார்.

ஏன் என்று கேட்கிறீர்களா? இந்த ஆண்டின் மத்தியில் ஜோதிகாவுக்கும், அவரது மனம் கவர்ந்தவருக்கும் கெட்டி மேளம் கொட்டப்படுவதுஉறுதியாகி வருதிறதாம். பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil