»   »  மாயா( வி)னோதங்கள்!

மாயா( வி)னோதங்கள்!

Subscribe to Oneindia Tamil

மாயாவி படத்தை எந்த நேரத்தில் பாலா தொடங்கினாரோ, ஒரே குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறதாம் யூனிட்.

இயக்குநர் பாலாவின் சொந்த பேனரில் தயாராகும் முதல் படம் மாயாவி. பாலாவின் மனதுக்குப் பிடித்த ஹீரோவான சூர்யாவும், அவருக்குரொம்பவும் பிடித்தவரான ஜோதிகாவும் இந்தப் படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.

மேஜிக் கலைஞனின் கதையான இந்தப் படத்தை இயக்குவது பாலாவின் உதவியாளர் சிங்கம்புலி. பூஜை போட்டு படத்தைத் தொடங்கியகையோடு, சில ஸ்டில்களை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

வித்தியாசமான கெட்டப்பில் கலர் கலர் சட்டைகளுடன் சூர்யா அசத்தலாக போஸ் கொடுத்திருக்க, பக்கத்தில் திவ்யமாக நின்றிருந்தார்ஜோதிகா. போட்டோக்களைப் பார்த்தே படத்திற்கு செம எதிர்பார்ப்பு கூடியது.

ஆனால் படம் இப்போது ரொம்பக் குழப்பத்தில் இருக்கிறதாம். குழப்பத்திற்கு இரண்டு பேர் காரணம் என்கிறது யூனிட். முதல் குழப்பம்சூர்யாவாம்.

கதையில் ஏகப்பட்ட மாறுதல்களை அவ்வப்போது கூறிக் கொண்டே இருக்கிறாராம். இதனால் கதையை மாற்றி மாற்றி எழுதவேண்டியுள்ளதாக யூனிட்டார் குறைபட்டுக் கொள்கிறார்கள்.

இந்த மாற்றத்தால், ஷூட்டிங்கில் ஏகப்பட்ட தடங்கல்கள் ஏற்படுகிறதாம்.

இரண்டாவது குழப்பம் சிங்கம்புலி. சூர்யாவிடம் ஒரு ஸ்கிரிப்டைக் காட்டுகிறாராம், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சீனை ஷூட் செய்கிறாராம்.இதனால் இருவருக்கும் இடையே மனக் கசப்பும் ஏற்பட்டுள்ளதாம்.

இந்தக் குழப்பத்தைப் பார்த்த ஜோதிகா, மாயாவிக்குக் கொடுத்த கால்ஷீட்டை தூக்கி சந்திரமுகிக்குக் கொடுத்து விட்டு ரஜினியுடன் நடிக்கப்போய் விட்டார். மாயாவி தொங்கிக் கொண்டிருக்கிறதாம்.

படத்தை பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப் போவதாக பூஜையன்று கூறினார்கள். இப்போது இருக்கும் பிரச்சனைகளைப் பார்த்தால் படம்தமிழ் புத்தாண்டிற்கே வருவது சந்தேகம் என்று யூனிட்டில் கூறுகிறார்கள்.

மாயாவி குழப்பத்தில் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பாலா தனது இயக்கத்தில் தயாராகும் படத்தில் மூழ்கி விட்டார்.

பிதாமகன் முடிந்தும் கமலை வைத்து பாலா படம் பண்ணப் போகிறார் என்றும், இல்லை தனுஷை வைத்துப் படம் பண்ணப் போகிறார்என்றும் செய்திகள் வெளியானது.

ஆனால் அந்த யோகம் அஜீத்துக்குத்தான் அடித்தது. பாலாவின் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் இந்தப் படத்திற்கு, நான் கடவுள் என்றுபெயரிடப்பட்டுள்ளது.

டைட்டிலே மிரட்டுதுப்பா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil