»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

பணத்தை மட்டுமே முக்கியமாகக் கருதி படங்களுக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காமல் கடுக்காய் கொடுப்பதால்ஜோதிகா மீது கோலிவுட்காரர்கள் ரொம்பவம் கடுப்பாக இருக்கிறார்களாம்.

இதனால் விரைவில் அவருக்கு "ரெட் கார்ட்" போட்டு தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

"தொப்பையர் குல திலகம்" ஜோவுக்கு இப்போது கையில் அதிகம் படம் இல்லை. இதற்கு அவர் கேட்கும் அபாரசம்பளம் மட்டும் காரணம் இல்லை. இனிமேல் அவருக்கு யாரும் படம் தர வேண்டாம் என்று வாய் மொழியாகதயாரிப்பாளர்கள் தரப்பில் போடப்பட்டுள்ள உத்தரவும் ஒரு காரணமாம்.

அப்படியும் கூட ஒரு சில படங்களில் ஜோ நடித்து வருகிறார். ஆனாலும் அவற்றிலும் கூட ஜோ பண்ணும் கூத்துதாங்க முடியவில்லையாம்.

விக்ரமுடன் நடித்து வரும் "தூள்", ரம்பாவின் தயாரிப்பில் வளர்ந்து வரும் "த்ரீ ரோஸஸ்" ஆகிய படங்களின்ஷூட்டிங்கில் சரிவர கலந்து கொள்ளாமல் டபாய்த்து வருகிறாராம் ஜோ.

இதனால் இரு படங்களின் தயாரிப்பாளர்களும் சங்கத்தில் புகார் செய்துள்ளார்களாம். இனி சரிப்பட்டு வர மாட்டார்என்று முடிவு செய்துள்ள தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஜோவுக்கு அதிகாரப்பூர்வ தடை உத்தரவுபிறப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறதாம்.

விரைவில் ஜோதிகாவுக்குத் தடை விதித்து செய்தி வரலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil