twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிம்ரனுக்குப் பதில் ஜோதிகா

    By Staff
    |

    சந்திரமுகி படத்தில் சிம்ரனுக்குப் பதிலாக ஜோதிகா நடிக்கிறார்.

    ரஜினி ஒரு படம் தொடங்கி விட்டால் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. படத்தைப் பற்றி புதுசு புதுசாக நியூஸ் வந்து கொண்டேஇருக்கும். படத்தின் கதை என்று குறைந்தது 50 கதைகளையாவது வெளி வரும்.

    இப்போது சந்திரமுகி விஷயத்திலும் நியூசுக்கு பஞ்சமில்லை. சிம்ரன் கர்ப்பமாக இருக்கிறார்; அதனால் படத்தை விட்டுநீக்கப்பட்டார் என்று நியூஸ் வந்தது. அதற்கு அடுத்த நாளே, நான் கர்ப்பமாக இல்லை என்றார் சிம்ரன்.

    இதையடுத்து அவர் சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால்தான் படத்திலிருந்து அவரை நீக்கினோம் என்றார்கள்.

    இது தவிர இன்னொரு பூகம்பமும் கிளம்பியிருக்கிறது. சந்திரமுகி படத்தின் கதை, நான் நடித்த மணிசித்தரதாழ் படத்தின் கதையேஆகும். அந்தப் படத்தின் ரைட்ஸ் என்னிடம் தான் உள்ளது என்று கூறியிருக்கிறார் மலையாள நடிகர் மோகன்லால்.

    படம் தொடங்கப்படும் சமயத்தில் சிவாஜி பிலிம்ஸ் ராம்குமார், ஒரிஜினல் மலையாளப் படத்தின் ரைட்ஸை வாங்கிவிட்டோம்என்று கூறியிருந்தார். அதை மோகன்லால் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

    ஆனால் பி.வாசு மட்டும் எப்போதும் போல, இது எனது சொந்த கதை என்று விடாமல் கூறி வருகிறார். படம் வெளியானால்உண்மை தெரியும் என்று நமுட்டலாக சிரிக்கிறார்கள் கோலிவுட்டில்.

    இதற்கிடையே சூட்டிங்ஸ்பாட்டில் பி.வாசுவின் செயல்பாடுகளும் கூட ரஜினிக்கு திருப்தியாக இல்லை என்று தகவல் வருகிறது.

    ரஜினி எதிர்பார்த்த அளவுக்கு, கதையை காட்சியாக கொண்டு வர பி.வாசுவால் முடியவில்லை. ரஜினிக்குப் பிடித்த கதைதான்என்றாலும் அதற்கு வாசு திரைக்கதை அமைத்திருக்கும் விதம் திருப்தியாக இல்லையாம்.

    மேலும் பி.வாசு இன்னும் அந்தக் கால பாணியிலேயே கதை சொல்லிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். கடந்த சிலஆண்டுகளில் நல்ல இயக்குனர்கள், இளைஞர்கள் எல்லோரும் சேர்ந்து தமிழ்த் திரையுலகை தரத்தில் புரட்டிப்போட்டுவிட்டார்கள். (அதில் சில சொத்தைகளும் இருக்கத் தான் செய்தன).

    ஹீரோவுக்காக கதை என்ற கேவலம் ஒழிந்துவிட்டது. இப்போது கதையே ஹீரோ என்ற நல்ல சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது.இதையெல்லாம் வாசு உள்வாங்கியதாகத் தெரியவில்லை.

    ரஜினி இருப்பதால் எப்படி படம் எடுத்தாலும் பிச்சுக்கும் என்று அவர் நம்புகிறார் என்கிறார்கள். ஆனால், பாபா தந்த பாடத்தில்இருந்து நிறையவே பாடம் கற்றுவிட்ட ரஜினியால், வாசுவின் இந்த அப்ரோச்சை ஏற்க முடியவில்லையாம்.

    லேட்டஸ்ட் டெக்னிக், இளைய தலைமுறை ரசிகர்களைக் கவரும் விஷயங்கள், கதையில் புதுமை இல்லாவிட்டால் சந்திரமுகிதேறாது என்று ரஜினி நினைக்கிறார்.

    அதனால் தான் ஹைதராபாத்தில் வேக வேகமாக நடந்த சூட்டிங்கை ரஜினி பாதியிலேயேகேன்சல் செய்துவிட்டார் என்கிறார்கள்.

    சூட்டிங்கை மீண்டும் தொடரும் முன் திரைக்கதை உள்ளிட்ட எல்லா குறைகளையும் நீக்கிவிட்டு வரும்படி வாசுவிடம் சொல்லிஅனுப்பிவிட்டாராம்.

    படத்தில் இளமையான தோற்றத்தில் காட்சி அளிப்பதற்காக, ரஜினி தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். படத்தில் ரஜினிக்குகூடவே இருந்து அவரையே கலாய்க்கும் ஒரு கேரக்டரில் வடிவேலு வருகிறார்.

    கதைப்படி பிரபுவுக்கு சித்தப்பா வடிவேலு,பெரியப்பா நாசர்.

    இந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் நடிப்பதற்காக மும்பை மாடல்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்நியன்படத்திற்காக 100 மாடல்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இவர்களை அப்படியே சந்திரமுகி படத்திலும் பயன்படுத்திக்கொள்ளப் போகிறார்கள்.

    இதற்கிடையே சிம்ரனுக்குப் பதிலாக அவரது வேடத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரபுவுக்கு ஜோடியாகஇவர் நடிப்பார்.

    ரஜினிக்கு ஜோடியாக நயனதாரா ஏற்கனவே இறுதி செய்யப்பட்டது தெரிந்தது தானே.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X