»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வரும் 7ம் தேதி கமல்ஹாசனுக்குப் பிறந்த நாள். இதையொட்டி பேச்சுப் போட்டி நடத்தவும், அதில் வெற்றிபெறுபவர்களுக்கு தனது தாயார் ராஜலட்சுமி அம்மாளின் பெயரால் விருது வழங்கவும் முடிவு செய்தார் கமல்.

பேச்சுப் போட்டிக்கான தலைப்பு இந்தியாவில் கருத்து சுதந்திரம் தடைக்கல்லா, படிக்கல்லா என்பது தான்.

சென்னை மயிலாப்பூர் சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் பள்ளியில் நடந்த இந்தப் பேச்சுபோட்டியைத் துவக்கிவைத்தவர் நடிகை கெளதமி.

கமல்- கெளதமி நட்பு குறித்து அரசல் புரசல் செய்திகள் வந்தாலும் கமலின் பிறந்த நாள் நிகழ்ச்சியை கெளதமியேதலைமை ஏற்று நடத்துவது அந்த அரசல்- புரசல் செய்திகளுக்கு மேலும் தீனி போட்டுள்ளது.

பேச்சுப் போட்டியில் வெல்பவர்களுக்கு பிறந்தநாளன்று விருது வழங்கப் போவதும் கெளதமி தான்.

சரிகா, குழந்தைகளைப் பிரிந்த பின், சிம்ரனுடன் டூ விட்ட பின் வரும் கமலின் பிறந்த நாள் இது. இந்தப்பிறந்தநாளில் கமலிடம் கெளதமி முக்கிய இடம் பிடித்திருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil