»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசனின் சண்டியர் படத்தில் கெளதமிக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் தரப்படவுள்ளது. தேவர் மகன்படத்தில் செய்தது போல இந்த பாத்திரம் சின்னதாக அதே சமயத்தில் பவர்ஃபுல்லாக இருக்குமாம்.

சண்டியர் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மீண்டும் செட்அமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. அது முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இந் நிலையில் இப்போதெல்லாம் கமலுடன் அடிக்கடி காணப்படுகிறார் கெளதமி. கணவரைப் பிரிந்து வந்துவிட்டஅவர் தான் கமல் சமீபத்தில் சிறுநீரகக் கல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது கூடவே இருந்துஒத்தாசை செய்தார்.

சரிகாவைப் பிரிந்துவிட்ட, சிம்ரனுடன் டூ விட்டுள்ள கமலுக்கும் கணவரைப் பிரிந்துவிட்ட கெளதமிக்கும்இடையே நட்பு துளிர்த்துள்ளதாம். இதனால் தான் கமலுக்கு ஹாஸ்பிடலில் முதல் சண்டியர் வரை அனைத்திலும்உதவி வருகிறாராம் கெளதமி. சண்டியர் பட டைட்டிலில் உதவி இயக்குனர் என்று கெளதமியின் பெயர்போடப்பட்டாலும் ஆச்சரியப்பட வேண்டாம் என்கின்றனர் கோடாம்பாக்கம் குருவிகள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil