»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னையில் நடந்த ஆடியோ கேசட் விழாவில் கமலஹாசனும், சிம்ரனும் சேர்ந்து வந்து காண்போரைக்கவர்ந்திழுத்தனர்.

டாக்டர் ஸ்ரீகாந்த் என்பவர் தயாரித்துள்ள "காதல் கொண்டால்" என்ற ஆடியோ கேசட் ஆல்பம் சென்னையில்வெளியிடப்பட்டது.

போட் கிளப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமலஹாசன் கலந்து கொண்டார்.

அவருடன் சிம்ரனும் சேர்ந்தே வந்திருந்தார். இருவரும் அடிக்கடி பேசிச் சிரித்துக் கொண்டிருந்தது பார்த்தவர்களைமிகவும் கவர்ந்திழுத்தது.

மாடர்ன் டிரஸ், கண் கண்ணாடி இல்லாமல் சாதாரண சேலையில், சிம்பிளாக சிம்ரன் வந்திருந்தார். அதேபோலவேகமலும் கோட்-சூட் போடாமல் மிகவும் சாதாரணமாக வந்திருந்தார்.

கமல், சிம்ரன் சேர்ந்துவருவது புதிதல்ல என்றாலும் கூட இப்போதெல்லாம் அடிக்கடி சேர்ந்து வர ஆரம்பித்துள்ளதுஏற்கனவே இருந்து வரும் வதந்தியைப் பெரிதாக்கும் விதத்தில் உள்ளது. பலருடைய கண்களை உறுத்திக்கொண்டும் இருக்கிறது.

நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.வி. சேகர், அபஸ்வரம் ராம்ஜி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil