»   »  கரீனா- சைப் திடீர் மோதல்

கரீனா- சைப் திடீர் மோதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
புதுக் காதலர்களான கரீனா கபூரும், சைப் அலி கானும் திடீரென்று மோதிக் கொண்டதால் பிரிந்து விடுவார்களோ என்ற எதிர்பார்ப்பு பாலிவுட்டில் பரவியுள்ளதாம்.

விழுந்து விழுந்து காதலித்து வந்த ஷாஹித் கபூரை சமீபத்தில்தான் உதறினார் கரீனா கபூர். உதறியது ஷாஹித்துக்கே தெரியாத நிலையில் சைப் அலிகானுடன் கரம் கோர்த்து புது நட்புக்கு அஸ்திவாரமும் போட்டார்.

காதல் மன்னன் என்று பாலிவுட்டில் பெயர் எடுத்த சைப் அலி கானும், கரீனாவும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் போக ஆரம்பித்தனர். இதுகுறித்து ஆரம்பத்தில் மறுத்து வந்த சைப், சமீபத்தில்தான் ஆமாம், ரெண்டு பேரும் நட்போடு இருக்கிறோம் என்று ஒத்துக் கொண்டார்.

இதையடுத்தே, கரீனா தன்னை விட்டு விலகியது ஷாஹித்துக்குத் தெரிய வந்தது. இதுகுறித்து இதுவரை வாய் திறக்காமல் சோகமாக உள்ளார் ஷாஹித்.

இந்த நிலையில் கரீனாவுக்கும், சைபுக்கும் திடீர் மோதல் மூண்டுள்ளது. சமீபத்தில் இயக்குநர் பர்ஹான் அக்தர் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு இருவரும் ஜோடி போட்டு வந்திருந்தனர்.

பார்ட்டிக்கு வந்திருந்தவர்கள் கண்கள் எல்லாம் பாட்டில் மீதும், இந்த புது ஜோடி மீதும் மாறி மாறி ஊர்ந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் திடீரென கரீனாவுக்கும், சைபுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டனராம். ஒரு கட்டத்தில் கோபமடைந்த கரீனா, உங்களால்தான் ஷாஹித்தை பிரிந்தேன் என்று கண்ணீர் ததும்ப கூறியுள்ளார். இதைக் கேட்டதும் வாயை மூடு என்று சத்தம் போட்டாராம் சைப்.

இவர்களது இந்த சண்டையைப் பார்த்து அங்கு இருந்தவர்கள் எல்லாம் ஷாக் ஆகி நின்று விட்டனராம். இதைப் பார்த்து, சைபும், கரீனாவும் சுதாரித்துக் கொண்டு புன்முறுவலை முகத்தில் வரவழைத்துக் கொண்டு பார்ட்டியை வேகமாக முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டனராம்.

ஏன் இந்த சண்டை, எதற்காக சண்டை என்று புரியாமல் பாலிவுட்டே சிண்டை பிய்த்துக் கொண்டு இருக்கிறது. இருவரும் பிரிந்து விடுவார்களா என்று சிலர் பெட் கட்டவும் ஆரம்பித்து விட்டனராம்.

Read more about: kareena

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil