»   »  கிரணின் அல்டாப்பு

கிரணின் அல்டாப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போன கிரண் இப்போது தனது சொந்த ஊரில் பந்தா விட்டுக் கொண்டு திரிகிறாராம்.

ஜெமினி மூலம் அறிமுகமாகி தமிழில் ஒரு ரவுண்டு வந்த கிரண் கவர்ச்சியில் புகுந்து விளையாடினார். ஆனால் அவரது கவர்ச்சி தமிழ் ரசிகர்களுக்குவேகமாகவே திகட்டி விட்டது.

கிரணின் உடல் பெருத்துப் போனதும் இந்த திகட்டலுக்குக் காரணம். பட வாய்ப்பு சுத்தமாக இல்லாமல் போனதால் சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆடவும்இறங்கி வந்தார் கிரண்.

விஜய் கூட ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டுப் பார்த்தார். பின்பு நியூ படத்தில் கவர்ச்சியின் எல்லைக்கே சென்று நடித்தார். அதனால் படம் நன்றாக ஓடியது.

ஆனால் கிரணுக்கு மட்டும் வாய்ப்புகள் வரவேயில்லை. தெலுங்கு, கன்னட படவுலங்களும் ஏற்கனவே கிரணைக் கை கழுவி விட்டன. அதனால் வேறுவழியின்றி சொந்த ஊரான ஜெய்ப்பூருக்கே மீண்டும் போய் விட்டார் கிரண்.

இப்போது ஜெய்ப்பூரில் அவர் விடும் பீலாவுக்கு அளவே இல்லை என்கிறார்கள். அடிக்கடி அருகே இருக்கும் ஆக்ராவுக்குப் போய் தங்கி விட்டு ஊருக்குத்திரும்புவாராம் கிரண்.

வந்தவுடன் தனது தோழிகள், உறவினர்களிடம் அவுட்டோர் ஷூட்டிங் போய் வந்தேன், தெலுங்கு, கன்னடத்தில் நான் ரொம்ப பிசி என்று கதைவிடுவாராம். அவர்களும் கதையை ஆவென்று வாயைப் பிளந்து கேட்பார்களாம்.

அவர்கள் அந்தாண்டை போனதும், சென்னைக்குப் போன் போட்டு தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்லுங்களேன்என்று கொஞ்சலாக பேசிக் கெஞ்சுவாராம்.

கிரணிடம் அடிக்கடி போனில் சிக்கிக் கொள்வது அவரது பழைய மேனேஜராம்.

இனி சினிமாவை மட்டும் நம்பியிருந்தால் வண்டியை ஓட்ட முடியாது என்பதை கிரண், பழைய தொழிலான மாடலிங் பக்கம் மீண்டும் கவனத்தைச்செலுத்தியுள்ளார்.

அண்மையில் இந்தியில் ஒரு ஆல்பத்தில் கிரண் படுகவர்ச்சியாக ஆடியிருக்கிறார்.

தற்போது ஒரு விளம்பரப் படத்தில் நடிக்க சம்மதித்திருக்கும் அவர், சினிமாவை விட மாடலிங் எவ்வளவோ பெட்டர் என்று கூறி வருகிறார்.

மாடலிங்கில் ஓவராக கவர்ச்சி காட்டச் சொல்ல மாட்டார்கள், கிசுகிசு பேச மாட்டார்கள், மாதம் முழுவதும் வேலை செய்ய வேண்டியதில்லை என்றுசப்பைக்கட்டு கட்டி வருகிறார்.

இதற்கிடையே கிரணுக்கு அவரது வீட்டார் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும், வெகு சீக்கிரம் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார்என்றும் கூறப்படுகிறது.

எப்படியோ ஆட்டமும் அல்டாப்பும் குறைந்தால் சரிதான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil