»   »  பட விழாக்களைப் புறக்கணிக்கும் முன்னணி நடிகைகள்!

பட விழாக்களைப் புறக்கணிக்கும் முன்னணி நடிகைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்பெல்லாம் திரைப்பட விழாக்கள், குறிப்பாக படத்தின் விளம்பரத்துக்கு உதவும் ஆடியோ வெளியீடு, செய்தியாளர் சந்திப்புகளுக்கு படத்தின் நாயகிகள், குணச்சித்திர நடிகைகள் என எல்லோருமே தவறாமல் கலந்து கொள்வார்கள்.

இது அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க பெரிதும் உதவி வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் நடிகைகள் இந்த நிகழ்ச்சிகளுக்கு வராமல் போகவே, தயாரிப்பாளர் சங்கம் நடிகைகள் கண்டிப்பாக வரவேண்டும் என தீர்மானமே போட்டது.

ஆனால் இதையெல்லாம் எந்த நடிகையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குறிப்பாக முன்னணி நடிகைகள்.

அப்படியே தப்பித் தவறி வந்தாலும் ஏகத்துக்கும் அலட்டிக் கொண்டு, வந்த வேகத்திலேயே கிளம்பிச் சென்றுவிடுகிறார்கள்.

நயன நடிகை அட்வான்ஸ் வாங்கும்போதே போடும் முதல் நிபந்தனை 'நான் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டேன். கட்டாயப் படுத்தக் கூடாது' என்பதுதான். இப்படிச் சொன்னதால்தான் இவருக்கு தெலுங்கில் ஒரு ஆண்டு தடை விதித்தார்கள். இதனால் அங்கு மட்டும் இந்த நிபந்தனையை விதிப்பதில்லையாம்.

இன்னொருவர் பொன்வசந்த நாயகி. முன்பெல்லாம் ஏதாவது ஒரு விழாவுக்காவது வந்து தலைகாட்டிக் கொண்டிருந்த அவரும் இப்போது வெளிப்படையாகவே புரமோஷன் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்கிறாராம்.

சேட்டுக்கடை ஸ்வீட் நடிகையும் இப்போது கிட்டத்தட்ட இதே பாலிசியை கடைப்பிடிக்கிறாராம்.

சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்களை நினைச்சிப் பாருங்கம்மா!

English summary
Leading Tamil actresses nowadays boycotting all promotional events of their movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil