»   »  வேட்டையாடும் மாளவிகா

வேட்டையாடும் மாளவிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோடம்பாக்கத்தால் மறக்கப்பட்டு பேரழகன் மூலம் திரையில் மீண்டும் மின்னிய மாளவிகாவுக்கு தமிழில்மெதுவாக அடுத்த ரவுண்டு ஆரம்பித்துள்ளது.


மும்பை பக்கமாய் மாடலிங்குக்குப் போய்விட்ட மாளவிகா, பேரழகனில் ஒரு பாட்டில் தலை காட்டினார்.அப்படியே ஊருக்குப் போய்விடாமல் கோடம்பாக்கத்தில் வலை வீசினார்.

இளம் நடிகர்கள் நிச்சயமாக தன்னைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதால், சரத்குமார், அர்ஜூன், சத்யராஜ் ரகஹீரோக்களையும், இயக்குனர்களையும் சந்தித்து, தனக்கே உரிய கொஞ்சல் பாணியில் வாய்ப்பு கேட்டார்.

ஹீரோயின் சான்ஸ் எல்லாம் இல்லை என்று அவர்கள் கை கழுவிட, என்ன வேஷம் கொடுத்தாலும் நடிக்கிறேன்என்று இறங்கி வந்தாராம்.

இதன் பலனாக அடுத்து நான்கு படங்களில் புக் ஆகியுள்ளா மாளவிகா.

தான் நடிக்கும் மகா நடிகன் என்ற படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க சான்ஸ் வாங்கித் தந்திருக்கிறார்சத்யராஜ். சார்லி சாப்ளின், காதல் கிறுக்கன் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம் தான் டைரக்டர்.

இதில் கவர்ச்சிக்காக ஏற்கனவே மும்தாஜை புக் செய்துவிட்டாலும், மாளவிகாவுக்காக அதற்கு இணையானகவர்ச்சியுடன் ஒரு கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இது தவிர சந்துரு என்ற படமும் மாளவிகாவின் திறமையான முயற்சிக்கு பலன் தந்திருக்கிறது.


மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படவுள்ள இந்தப் படத்தில் அன்புபடம் மூலம் அறிமுகமான பாலா ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தப் படத்திலும் மாளவிகாவுக்கு ஹீரோயின் வேடமல்ல, கிளாமர் ரோல் தானாம். இந்தப் படத்தை இயக்குவதுபுதுமுக இயக்குனர் வெற்றி. அடுத்த மாதம் சூட்டிங் தொடங்குகிறது.

இந்த இரு படங்கள் தவிர தனது கன்னட நாட்டைச் சேர்ந்த அர்ஜூனின் சிபாரிசால் அவர் நடிக்கும் மணிகண்டாபடத்திலும் ஒரு கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார் மாளவிகா. அதே போல சரத்குமாரும் தனது அடுத்தபடத்தில் மாளவிகாவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்துள்ளார்.

இந்த வாய்ப்புக்களை வைத்து எப்படியாவது கோடம்பாக்கத்தில் மீண்டும் ஒரு ரவுண்டி கட்டிவிடுவதில் தீவிரமாகஇருக்கும் மாளவிகா, தனது சொந்த ஊரான பெங்களூருக்கும் சென்னைக்குமாக அடிக்கடி பறந்து வந்து சான்ஸ்வேட்டையாடியவண்ணம் இருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil