»   »  புருஷனுக்கு வெள்ளித் திரையில் பஞ்ச் வைத்த முன்னாள் மனைவி...!

புருஷனுக்கு வெள்ளித் திரையில் பஞ்ச் வைத்த முன்னாள் மனைவி...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: முன்னொரு காலத்தில் மல்லுவுட்டில் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை இவர். தன் பட நாயகனையே கணவராக மாற்றிக் கொண்ட இவர் சினிமாவிலிருந்து விலகி குடும்பத்தலைவியானார்.

பத்தாண்டுகளுக்கும் மேலான குடும்ப வாழ்க்கையில் திடீர் விரிசல் விழ, கணவரை சட்டரீதியாகப் பிரிந்து தற்போது மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்துள்ளார்.

Malluwood ex couple fights on screen

இந்நிலையில், கணவர் மீதான தனது கோபத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் தனது புதிய படத்தில் கணவரைத் தாக்கி பல வசனங்களை நடிகை பேசியுள்ளாராம்.

பொதுவாக தனக்கு போட்டியான நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களைத் தாக்கி தான் பெரும்பாலான பஞ்ச்கள் படங்களில் இடம் பெறுவது வழக்கம். ஆனால், அவற்றிலிருந்து வேறுபட்டு தனது முன்னாள் கணவருக்கு பஞ்ச் வசனங்கள் மூலம் தாக்கி பேசியுள்ளார் இந்த நடிகை.

தற்போது நடிகையின் இந்த வசனங்கள் தான் அங்கு பட்டிதொட்டி எங்கும் பரபரத்துக் கிடக்கிறதாம். மனைவிக்குப் பதிலடி தரும் விதமாக கணவரும் தனது அடுத்த படத்தில் தாக்குதல் வசனங்களை வைக்க தயார் ஆகி விட்டாராம்.

இவர்களது செயலைப் பார்த்து குடும்ப சண்டை முதலில் கோர்ட்டுக்கு போனது, இப்போது திரைக்கும் வந்துவிட்டதா என்று சிலர் நக்கலடிக்கின்றனர்.

English summary
The famous malluwood couple who got divorce recently are attacking each other through their movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil