»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

மந்த்ராவுக்கு தமிழில் சுத்தமாக ஒரு படம் கூட கைவசம் இல்லை. கால்ஷீட் டைரியில் ஆங்காங்கே இருப்பது தெலுங்கு படங்கள்தான்.இதனால் சென்னை வட பழனியில் வாடகைக்குக் குடியிருந்த வீட்டைக் காலி செய்து விட்டு ஹைதாராபாத்துக்குச் சென்று விட்டார்.

அங்கு சொந்தமாக வீடு வாங்கி குடியேறி விட்டார். புதுமனைப் புதுவிழாவில்கூட ஏராளமான தெலுங்கு பட அதிபர்கள். தமிழைமறந்து விட்டீர்களா என்று கேட்டால்,

இல்லையில்லை. தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வந்ததால் அங்கேயே நிரந்தரமாகத் தங்க முடிவெடுத்துள்ளேன். அதே நேரத்தில்தமிழில் வாய்ப்பு வந்தால் சென்னைக்கு வர ரெடி. அது ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் என்றால் கூட பரவாயில்லை வந்து ஆடிவிட்டுப்போவேன் என்கிறார்.

சிம்ரன் போடும் போன்


திடீர் திருமணம் செய்து கொண்டு கோடம்பாக்கத்துக்கு கும்பிடு போட்டிவிட்டுச் சென்ற சிம்ரனில் நிலையில் மாற்றம் தெரிகிறது.

உதயா படத்துக்காக சென்னையில் விஜய்யுடன் ஆட வந்த சிம்ரன் அப்படியே சில முன்னணி இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும்கால் போட்டாராம்.

அப்போது நான் மீண்டும் நடிக்க வந்தால் உங்கள் ஆதரவு கிடைக்குமா என்று அவர் கேட்க,தயாரிப்பாளர்கள்- டைரக்டர்கள் அதிர்ந்திருக்கிறார்கள்.

இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் உங்களுக்கு இல்லாத ஆதரவா என்று சொல்லி போனைவைத்தார்களாம்.

அதே போல சில தெலுங்குப் பார்ட்டிகளிடம் மீண்டும் கை நீட்டி அட்வான்ஸ் கூட வாங்க ஆரம்பித்துவிட்டார் சிம்ரன் என்கிறார்கள்.

சிம்ரன் நடிக்க வரமாட்டார் என்று அவரது கணவர் தீபக் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆடுன காலும் பாடுன வாயும் சும்மாஇருக்குமா. விரைவில் தீபக்குக்கு டாடா சொல்லிவிட்டு சிம்ரன் மீண்டும் நடிக்க வருவார் என்று அடித்துச் சொல்கிறார்கள்கோடம்பாக்கம் குருவிகள்.

Please Wait while comments are loading...