மாஸ் நடிகர் இப்படி ஆத்திரப்பட்டு பார்த்து ரொம்ப நாள் ஆச்சே.. அவரை அப்படி அப்செட் ஆக்கியது யார்?
சென்னை: தொடர்ந்து தனது அடுத்த படத்தின் காட்சிகள் கசிந்து வருவதால், இயக்குநர் மீது ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்துள்ளார் மாஸ் நடிகர்.
இந்நிலையில், சமீபத்தில் அந்த பாடல் காட்சியும் லீக்காகவே பயங்கர கடுப்பாகி கத்தியே விட்டாராம்.
மாஸ் நடிகர் சமீபத்தில் இந்த அளவுக்கு சத்தம் போட்டு பார்த்ததே இல்லை என கோலிவுட்டே பரபரப்பாக பேசி வருகிறது.

பயங்கர அப்செட்
இதுவரை எந்த படத்திலும் இந்த அளவுக்கு மாஸ் நடிகர் அப்செட் ஆனதே இல்லை என்கின்றனர். படம் ஆரம்பித்ததில் இருந்தே ஏகபட்ட சிக்கல்களை இயக்குநர் தரப்பும் தயாரிப்பு தரப்பும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களில் இயக்குநர் ரொம்பவே மெத்தனம் காட்டியது நடிகரை மிகவும் அப்செட் ஆக்கி உள்ளது.

தொடர்ந்து லீக்
ஒரு சில புகைப்படங்கள் கூட லீக் ஆகக் கூடாது என படம் முடியும் வரை சம்பந்தப்பட்ட நடிகரும் படக்குழுவினரும் நினைப்பார்கள். அப்போது தான் தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு எல்லாமே புதுசாக தெரியும். ஆனால், பாதி படத்தையே லீக் செய்து பார்த்து விட்ட அனுபவம் இப்போதே அந்த படத்தின் காட்சிகள் தொடர்ந்து லீக் ஆகி வரும் நிலையில், நடிகரை ரொம்பவே வருத்தமடைய செய்துள்ளது.

டாப் ஆங்கிளில் யார்
சமீபத்தில் வெளியான நடன வீடியோ டாப் ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்டதை அறிந்த அந்த மாஸ் நடிகர் சூட்டிங் ஸ்பாட்டில் உள்ள அத்தனை லைட் மேன்களை கீழே இறங்க சொல்லி பயங்கரமாக கத்தி வெளியே அனுப்பி உள்ள சம்பவம் கோடம்பாக்கத்தையே நடுங்க வைத்திருக்கிறது. மனுஷன் இப்படி கத்திப் பேசி ரொம்ப வருஷமாச்சே என பலரும் ஆடிப் போயுள்ளனர்.

ஜிம் பாய்ஸ்க்கு என்ன வேலை
லைட் மேன்களை சத்தம் போட்ட மாஸ் நடிகர் அங்கே கும்பலாக இருந்த ஜிம் பாய்ஸை பார்த்து முறைத்து விட்டாராம். உங்களுக்கு இங்கே என்ன வேலை. சூட்டிங் ஸ்பாட்டில் சம்பந்தப்பட்டவர்களை தவிர வேறு யாரும் இருக்க கூடாது என இயக்குநருக்கு உரைக்கும் படி மாஸ் நடிகர் கத்தியதை புரிந்து கொண்டு இயக்குநர் உடனடியாக அனைவரையும் அப்புறப்படுத்தினார் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ரிலீஸ் தேதி சிக்கல்
ஏற்கனவே நண்பர் நடிகர் போட்டிக்கு வர மாட்டார் என நினைத்து இருந்த நிலையில், இந்த முறை அவர் மோதி பார்க்க முடிவெடுத்ததை அறிந்து அப்செட் ஆகி உள்ள நிலையில், தயாரிப்பாளர்கள் குறித்து வைத்துள்ள ரிலீஸ் தேதியிலும் நடிகருக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது. இவை எல்லாம் ஒட்டுமொத்தமாக மண்டைக்குள் சென்ற நிலையில் தான் அமைதியாக இருப்பவர் புயலாக பாய்ந்து விட்டாராம்.


Click it and Unblock the Notifications











