வாரிசுக்கு மாஸ் நடிகரை பார்த்து ஓவர் பயம் வந்துடுச்சா.. கடைசி படத்துக்கு பெரிய கத்தியை வீச காரணம்?
சென்னை: ஏகப்பட்ட கத்திகள் தொடர்ந்து மாஸ் நடிகரை குத்திக் கொண்டே இருந்தாலும் ஒவ்வொரு முறையும் உஷாராக தப்பித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இப்படித்தான் ஐடி விங் எல்லாம் வைத்து அந்த மேக்னட்டை மொக்கை பண்ணி சாப்டரை க்ளோஸ் செய்தனர்.
இந்நிலையில், அதே ரூட்டை தற்போது மாஸ் நடிகர் பக்கமும் திருப்பி அவரை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என முடிவு செய்து வருவதாக கோடம்பாக்கத்தில் பகீர் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

நடிகரும் தொடர்ந்து தனக்கு எதிராக வரும் அதிவேக பவுன்சர் பந்துகளை பவுண்டரிகளுக்கு திருப்பி விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நடிகருக்கு எதிராக அஸ்திவாரத்தை எப்படி ஸ்ட்ராங் செய்வது என வாரிசுக்கு ரொம்பவே பயம் ஏற்பட்டு இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
அதிகரிக்கும் செல்வாக்கு: இதுவரை சினிமவில் இருந்து வந்தவர்களில் ஒரு சில முன்னணி நடிகர்களை முழுசா நம்பி அவர்கள் பக்கம் மக்கள் திரண்டனர். ஆனால், பலர் எதுக்கு வந்தோம் ஏன் வந்தோம் என்றே தெரியாமல் சினிமாவில் ஃபிளாப் படங்களை கொடுப்பது போல எடுத்துக் கொண்ட புது ரூட்டிலும் பல்பு வாங்கியுள்ளனர். ஆனால், மாஸ் நடிகர் பக்காவாக பிளான் போட்டு செயல்பட்டு வரும் நிலையில், அவரது செல்வாக்கு அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்.
வாரிசுக்கு பயம்: பல காலமாக தங்களது குடும்பத்தை நடிகர்கள் அட்டாக் செய்து வரும் நிலையில், இவரும் அதே வேலையை அசால்ட்டாக செய்து விடுவாரா என்கிற பயம் வாரிசுக்கு நிறையவே வந்துவிட்டதாம். இப்போதைக்கு அப்பா தயவு நம்மை காப்பாற்றிவிடும். ஆனால், எதிர்காலத்தில், நம்முடைய செல்வாக்கை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என அவரும் பல திட்டங்களை போட்டு வரும் நிலையில், ஆரம்பத்திலேயே ஃபீல்ட் அவுட்டாக்கும் வேலையையும் பார்க்கத் தொடங்கி விட்டார் என கிசுகிசுக்கப்படுகிறது.
பெரிய கத்தி வீச முடிவு: நடிகரின் கடைசி படத்துக்கு எதிராக ஏற்கனவே பல கத்திகளை வீசி வரும் நிலையில், பலமான ஒரு பெரிய கத்தியையும் வீசவும் பலே திட்டங்களை போட்டு வருவதே வாரிசு தான் என்கின்றனர். மேலும், ரசிகர்கள் சண்டைகளையும் கரெக்டாக ட்யூன் செய்துக் கொண்டே இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











